தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Breast Milk : 50மி.லி தாய்ப்பால் ரூ.500க்கு விற்பனை.. சட்ட விரோதமாக செயல்பட்ட கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

Breast Milk : 50மி.லி தாய்ப்பால் ரூ.500க்கு விற்பனை.. சட்ட விரோதமாக செயல்பட்ட கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

Pandeeswari Gurusamy HT Tamil
May 31, 2024 02:56 PM IST

Breast Milk : புரோட்டீன் பவுடர் விற்கப்பதற்காக வழங்கப்பட்ட லைசன்ஸ் நம்பரை வைத்து தாய்பால் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சுமார் 50 தாய்பால் பாட்டில்களை கைப்பற்றினர்.

50மி.லி தாய்ப்பால் ரூ.500க்கு விற்பனை.. சட்ட விரோதமாக செயல்பட்ட கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த அதிகாரிகள்!
50மி.லி தாய்ப்பால் ரூ.500க்கு விற்பனை.. சட்ட விரோதமாக செயல்பட்ட கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த அதிகாரிகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை மாதவரம் பகுதியில் 50 மி.லி தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை மாதவரத்தில் சட்டவிரோதமாக பாட்டில்களில் அடைத்து தாய்ப்பால் விற்ற முத்தையா என்பவரின் லைஃப் வேக்சின் ஸ்டோர் என்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

புரோட்டீன் பவுடர் விற்கப்பதற்காக வழங்கப்பட்ட லைசன்ஸ் நம்பரை வைத்து தாய்பால் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சுமார் 50 தாய்பால் பாட்டில்களை கைப்பற்றினர். இதையடுத்து சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

தாய்ப்பால் எப்படி கிடைத்தது என விசாரணை

தாய்ப்பால் எங்கிருந்து எப்படி கிடைத்தது. எப்படி பதப்படுத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்தார் என்பது குறித்து அதிகாரிகள் முத்தையாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சோதனை இந்தக் கடையில் ஒரு நோட்டையும் பறிமுதல் செய்துள்ளோம். அதில் தாய்ப்பால் வழங்கும் தாயின் பெயர்கள், போன் நம்பர் ஆகிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களை தொடர்பு கொண்டு உறுதிப் படுத்தினால் தான், கடைக்காரர் சேகரித்து வைத்துள்ள விவரங்கள் உண்மையா என்பது குறித்த விபரங்கள் தெரிய வரும்.

தாய்ப்பாலின் நன்மைகள்

*தாய்ப்பாலில் உயர்ந்த சதவீத லாக்டோஸ், கலட்டோஸ் அதிக அளவில் உள்ளதால் இளம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.

* உடல் வளர்ச்சிக்கான சுண்ணாம்பு சத்து அதிக அளவில் தாய்பாலில் இருக்கிறது.

* இதில் அமினோ அமிலம் டாயூரின் மற்றும் சிட்டரின் உள்ளது. இது உணவு பரிமாற்றத்திற்கு மிகவும் உதவுகிறது.

*தாய்ப்பால் கொடுப்பது பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும்.

*அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பதால். இதயம் பாதுகாக்கப்படுவதோடு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது.

*தாய்ப்பால் கொடுப்பது கர்பப்பை புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும்.

பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டியவை

*பெண்கள் கருவுற்று இருக்கும் நிலையில் அவர்கள் புகைப்படித்தல், மது அருந்துதல் என்பது அவர்களின் குழந்தைகளை பாதிப்பதை காட்டிலும், தாய்மை பருவத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அவர்கள் கொடுக்கும் பால் குழந்தைகளுக்கு வியாதியூட்டும் கிருமியாகவே மாறிவிடுகின்றது.

*புகைப்பிடிக்கும் தாய்மார்கள் ஊட்டும் தாய்பாலின் பாதிப்பு குழந்தைகளிடம் ஆரம்பகட்டத்தில் காண்பிப்பதில்லை. குழந்தைகளின் 6 முல் 7 வயதுகளில் அவர்களின் அறிவாற்றல் திறமைகளை குறிவைத்து தாக்குகிறது.

* தாய்பாலையே விஷமாக மாற்றும் திறமை அந்த தாய்மார்களிடமே உள்ளது. எனவே பெண்கள் புகைப்பிடித்தல், குடிப்பழக்கங்களை கைவிடுதல் அவசியமாகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்