Bharathidasan Memorial Day: பெண்ணுரிமைக்கு முன்னுரிமை தந்த கவிஞரின் நினைவு நாள் இன்று
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bharathidasan Memorial Day: பெண்ணுரிமைக்கு முன்னுரிமை தந்த கவிஞரின் நினைவு நாள் இன்று

Bharathidasan Memorial Day: பெண்ணுரிமைக்கு முன்னுரிமை தந்த கவிஞரின் நினைவு நாள் இன்று

Manigandan K T HT Tamil
Apr 21, 2023 09:39 AM IST

Bharathidasan: பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது 16 வயதில், கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார்.

கவிஞர் பாரதிதாசன்
கவிஞர் பாரதிதாசன்

அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.

பாரதிதாசன், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதிக பற்றுடையவராக இருந்தார். புதுச்சேரியில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். ஆனாலும் தமிழை சிறப்பாக கற்றுத் தேர்ந்தார்.

பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது 16 வயதில், கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார்.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என எழுதினார் பாரதிதாசன்.

புரட்சிக்கவி, பாவேந்தர் என்றும் அழைக்கப்படுபவர். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு தொண்டாற்றியவர்.

பாரதிதாசன் தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது.

தனது படைப்புகளுக்காக ‘சாகித்ய அகாடமி விருது’ பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும்.

பாரதிதாசன் 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அதனாலேயே பாரதிதாசன் என தனது பெயரை வைத்துக் கொண்டார்.

‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’ உள்ளிட்ட பல நூல்களை இயற்றியுள்ளார்.

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றினார்.

பன்முகம் கொண்ட பாரதிதாசன், 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இயற்கை எய்தினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.