Ban for RSS training: சென்னை பள்ளியில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி...அனுமதி மறுப்பு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ban For Rss Training: சென்னை பள்ளியில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி...அனுமதி மறுப்பு

Ban for RSS training: சென்னை பள்ளியில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி...அனுமதி மறுப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 25, 2022 01:18 PM IST

பள்ளி வளாகங்களில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தகூடாது என பள்ளிக் கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ள நிலையில், சென்னையில் தனியார் பள்ளி வளாகத்தில் நடத்த இருந்த ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சென்னை தனியார் பள்ளியில் நடத்த திட்டமிட்டிருந்த ஆர்எஸ்எஸ் முகாமுக்கு அனுமதி மறுப்பு
சென்னை தனியார் பள்ளியில் நடத்த திட்டமிட்டிருந்த ஆர்எஸ்எஸ் முகாமுக்கு அனுமதி மறுப்பு

சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நவம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் இந்த பயிற்சி முகாம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் , கல்வி நிறுவனங்களில் அரசியல் மற்றும் மதம் சாரந்த நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது, இதனால் ஆர்எஸ்எஸ் கூட்டத்தை நடத்த கூடாது. இது சட்டப்படி தவறு. மீறி அனுமதி அளித்தால் அந்த கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்து.

இந்த உத்தரவை சுட்டிக்காட்டி சென்னையில் நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் உள்ள அரசு மாநகராட்சி பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதுதொடர்பான விடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பள்ளியை சுத்தம் செய்வதாக நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டு, அவர் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி பயிற்சி நடத்தியிருக்கின்றனர். கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதைத்தொடர்ந்து தற்போது சென்னையில் உள்ள தனியார பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாஜகவை சேர்ந்த மூன்று முக்கிய பிரபலங்கள் பங்கேற்பதாக இருந்தது.

அவர்கள் மூவருக்கும் இடையே கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படும் நிலையில், ஒன்றாக இணைந்த பங்கேற்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி கட்சியனரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.