Jallikattu 2024: அவனியாபுரம் ஜல்லிகட்டு! அமைச்சர் காரை சுத்து போட்ட காளையர்கள்!
”Avaniyapuram Jallikattu 2024: போட்டியில் வெற்றி பெறும் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது”
தை பொங்கல் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்றும், பாலமேட்டில் நாளையும், அலங்காநல்லூரில் நாளை மறுநாளும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் வாடிவாசலுக்கு பூஜை செய்யப்பட்டு வருகிறது. மேலும் போட்டியில் கலந்து கொள்ள உள்ள காளைகளுக்கும், காளையர்களுக்கு இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகிறது.
மருத்துவ பரிசோதனை முடிந்த பின் போட்டிக்கு முன்னதாக வாடிவாசலில், ’விதிகளுக்கு உட்பட்டு வீர விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வோம்’ என வீரர்கள் ஒன்று கூடி உறுதி மொழி மொழி எடுக்க உள்ளனர்.
காளை மாடுகளின் உரிமையாளர்கள் காளைகளின் மூக்கணாங்கயிற்றை அறுக்க கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்களை தடுக்க 2500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அவனியாபுரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் கல்ந்து கொள்ள 2400க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பதிவு செய்திருந்த நிலையில் 1000க்கும் மேற்பட்ட காளைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் 600க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் வெற்றி பெறும் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது.
10 சுற்றுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டுபோட்டியை நடத்த திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 2 அல்லது 3 காளைகளை பிடிக்கும் நபர்களூக்கு அடுத்த சுற்றில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிறந்த காளையை தேர்வு செய்யும் குழு அமைக்கப்பட்டுள்ளது. களத்தில் எவ்வளவு நேரம் விளையாடுகிறது. வீரர்களை தொடவிடாமல் எப்படி திமிறுகிறது உள்ளிட்ட காரணங்களை கொண்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.
வீரர்களுக்கும், மாடுகளுக்கும் காயம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், நீண்ட தடுப்புகளும், விழுந்தால் காயம் ஏற்படாமல் இருக்கும் வகையில் தரைப்பகுதிகளில் தென்னை நார்களும் கொட்டப்பட்டுள்ளது.
வாடிவாசல் அருகிலேயே சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், உடனடியாக அவசர சிகிச்சைகள் மேற்கொள்ள வீரர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
ஆன்லைனில் பதிவு செய்த பல வீரர்களுக்கு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதி தரவில்லை என்று கூறி நேற்றிரவு அமைச்சர் மூர்த்தியின் வாகனத்தை முற்றுகையிட்டு வீரர்கள் போராட்டம் நடத்திய நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின்னர் கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்