தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அறிவிப்பு

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அறிவிப்பு

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 15, 2024 01:11 PM IST

Vikravandi By Election: இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி அவர்கள் போட்டியிடுவார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அறிவிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அறிவிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

" விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் ஜூலை 10 ஆம் நாள் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி அவர்கள் போட்டியிடுவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மருத்துவர் ராமதாசை சந்தித்த வேட்பாளர்

இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி பா.ம.க, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்  ராமதாசை தைலாபுரம் தோட்ட இல்லத்தில் இன்று காலை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இடைத்தேர்தல் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் (ஜூன் 14) இன்று தொடங்கியுள்ளது. வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு ஜூன் 21 ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும், வேட்புமனுக்கள் மீது 24 ஆம் தேதி பரிசீலனை நடைபெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்ப பெற 26 ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பாமக போட்டி

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின் படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளரின் பெயரை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,"தமிழகத்தில் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழ் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா (முதுகலை ஓமியோபதி மருத்துவம்) போட்டியிட உள்ளார். கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று அதில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.