Trichy Crime : 3 ஆவதும் பெண் குழந்தையா? ஜோசியர் பேச்சைக் கேட்டு கருக்கலைப்பு.. பரிதாபமாக பறிபோன உயிர்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Trichy Crime : 3 ஆவதும் பெண் குழந்தையா? ஜோசியர் பேச்சைக் கேட்டு கருக்கலைப்பு.. பரிதாபமாக பறிபோன உயிர்!

Trichy Crime : 3 ஆவதும் பெண் குழந்தையா? ஜோசியர் பேச்சைக் கேட்டு கருக்கலைப்பு.. பரிதாபமாக பறிபோன உயிர்!

Divya Sekar HT Tamil
Jul 31, 2023 01:03 PM IST

திருச்சியில் ஜோசியர் பேச்சைக் கேட்டு கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பிரியா
உயிரிழந்த பிரியா

இதனைத் தொடர்ந்து பிரியா தனது கணவர் சிவக்குமாருக்கு தெரியாமல் தனது தாயை அழைத்துகொண்டு கருக்கலைப்பு செய்வதற்காக துறையூர் பச்சமலை அருகே செங்காட்டுபட்டி கிராமத்தில் மருந்தகம் நடத்தி வரும் சித்ரா என்பவரிடம் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர். இதில் ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் பாதிக்கப்பட்ட பிரியா சம்பவம் தொடர்பாக தனது கணவர் சிவகுமாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக துறையூருக்கு வந்த கணவர் சிவக்குமார், மனைவி பிரியாவை மீட்டு திருச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், உரிய பாதுகாப்பின்றி அவருக்கு கருகலைப்பு செய்யப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

பின்னர் தனது மனைவி பிரியாவின் இறப்புக்கு காரணமாக இருந்த செங்காட்டுப்பட்டியில் இயங்கி வரும் மருந்தகத்தின் உரிமையாளர் சித்ரா மீது சிவகுமார் துறையூர் காலை நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த துறையூர் போலீசார் சிதராவை கைது செய்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.