Aavin Milk sale: ஆரஞ்சு பால் பாக்கெட் வணிக விற்பனை…ஆவின் வைத்த செக்
ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை வணிக ரீதியாக விற்பதை தடுப்பதற்கு ஆவின் மாதந்திர அட்டையுடன் குடும்பை அட்டையை சரிபார்த்து இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவின் நாள்தோறும் 40 லட்சம் லிட்டருக்க மேல் பால் கொள்முதல் செய்கிறது. இதில் கொழுப்புச்சத்து அடிப்படையில் பால் பிரிக்கப்பட்டு சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீலம் ஆகிய வண்ண பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் ஆவின் பால் கொள்முதல் உயர்த்தப்பட்டதால், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற பால் பாக்கெட் முறையே ரூ. 12, 16 என உயர்த்தப்பட்டன. இதனால் இந்த பாக்கெட்டுகளில் புதிய விலையானது ரூ. 60, ரூ. 76 என உயர்ந்தது.
இருப்பினும் மாதந்திர அட்டை மூலம் பால் வாங்குவோருக்கு ஆரஞ்சு பால் பாக்கெட் ரூ. 46 என்ற விலையிலேயே விற்க்கப்படுகிறது. இந்த பால் பாக்கெட்டுகள் சுமார் 1 லட்சம் லிட்டர் வரை மாதந்திர பால் அட்டைதாரர்களுக்கு விற்கப்படுகிறது.
இந்த பால் பாக்கெட் விலை உயர்வுக்கு பின்னர் மாதந்திர அட்டைதாரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன் மாதந்திர அட்டை மூலம் ஆரஞ்சு பால் பாக்கெட் வாங்கி வணிக ரீதியான விலைக்கு பலரும் விற்று வருவதாக தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில், இந்த செயல்களை தடுக்கும் நடவடிக்கையை ஆவின் மேற்கொண்டுள்ளது.
அதன்படி ஆவின் மாதந்திப அட்டையுடன், ரேஷன் பொருள்கள் வாங்க பயன்படும் குடும்ப அட்டையை சரிபார்த்து இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆவின் மேலாண்மை இயக்குநர் சுப்பையா கூறும்போது, "ஆவின் மாதந்திர அட்டைதாரர்கள் ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி வரை தங்களது பால் அட்டையை குடும்ப அட்டையுடன் சரிபார்த்து புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
இந்த பணி இணையத்தளம் மூலமாக நடைபெறுகிறது. முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கவும், மாதந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சலுகையை பிறர் வணிக் நோக்கில் பயன்படுத்தவதை தவிர்க்கவும் செய்யலாம்" என்றார்.