Aadi Amman Temple Tour : திருச்சி மக்களே! ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு தரிசனம்! சுற்றுலாத்துறை ஏற்பாடு!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Aadi Amman Temple Tour : திருச்சி மக்களே! ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு தரிசனம்! சுற்றுலாத்துறை ஏற்பாடு!

Aadi Amman Temple Tour : திருச்சி மக்களே! ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு தரிசனம்! சுற்றுலாத்துறை ஏற்பாடு!

Priyadarshini R HT Tamil
Jul 25, 2023 04:54 PM IST

Aadi Amman Tour : திருச்சி மக்களே உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு, ஆடி மாதத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்மனை ஒரே நாளில் தரிசித்து மகிழுங்கள். செவ்வாய், ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு சுற்றுலா
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு சுற்றுலா

ஆடி மாதத்தையொட்டி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலாத்துறையும், இந்து சமய அறநிலையத்ததுறையும் இணைந்து ஆன்மிகச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சுற்றுலாவில் உறையூர் வெக்காளியம்மன் கோயில், கமலவள்ளி நாச்சியார் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மாளிக்குடி உஜ்ஜயினி ஓம்காளியம்மன் கோயில், பெரம்பலூர், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில், பொன்மலை பொன்னேஸ்வரியம்மன் கோயில், தென்னூர் உக்கிரகாளியம்மன் கோயில், ஆகிய அம்மன் கோயில்களுக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன் முதல் பயணமாக இன்று காலை ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக வேன், 8 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இப்பயணத்தை மேற்கொண்டவர்களுக்கு சுற்றுலாத்துறையின் மூலம் சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு பயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்மன் கோயில்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அடுத்தப் பயணம் வரும் 28ம் தேதி ஆடி வெள்ளியன்று செயல்படவுள்ளது. இதற்கான பயணர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்துவிட்டனர்.

அதற்கடுத்தப் பயணம் செல்ல விரும்புவோர் (ஆடி மாத ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள்) 0431- 2414346 மற்றும் 9176995874 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து ஆன்மிக பக்தர்களும் இச்சுற்றுலாவில் பங்கேற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்