தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  A Young Woman Tried To Commit Suicide From The Second Floor In Krishnagiri

’நிச்சயதார்த்தம் செய்த பிறகு திருமணம் செய்ய மறுக்கிறார்’ இளம்பெண் தற்கொலை முயற்சி!

Divya Sekar HT Tamil
Jan 13, 2024 11:08 AM IST

கிருஷ்ணகிரியில் திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்த பிறகு ஏமாற்றுவதாக கூறி இளம் பெண் இரண்டாவது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் தற்கொலை முயற்சி
இளம்பெண் தற்கொலை முயற்சி

ட்ரெண்டிங் செய்திகள்

பின்னர் இருவரும் பேசி பழகி வந்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குணசேகரன்- அஸ்வினி ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெற்றோர் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். 

இந்த நிலையில் நேற்று மாலை கிருஷ்ணகிரி பெங்களூர் பழைய சாலையில் குணசேகரன் நடத்திவரும் நிதி நிறுவனம் மற்றும் டிராவல்ஸ் அலுவலகம் முன்பு இரண்டாவது தளத்தில் உள்ள பாதுகாப்பு சுவர் மீது அமர்ந்து கொண்டு அஸ்வினி தற்கொலை செய்து கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தகவல் அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பெண் என்னை திருமணம் செய்து கொள்வதாக நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுவதாகவும், பலமுறை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்திய என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என்னிடம் பேசுவதில்லை எனது செல்போன் எண்ணை எடுப்பதில்லை. குணசேகரன் இங்கு வரவேண்டும் இல்லையெனில் நான் தற்கொலை செய்து கொள்வேன் என தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நீடித்தது. இந்த நிலையில் அருகே உள்ள வேறு ஒரு கட்டிடத்தில் இரண்டாம் தளத்தில் இருந்த சுகுமார் என்கிற இளைஞர் திடீரென தனது கட்டிடத்தின் தடுப்பு சுவர் மீது ஏறி அருகே உள்ள கட்டிடத்தில் பாதுகாப்பு சுவரை பிடித்து தாண்டி தாவிச்சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள அந்த பெண்ணை காப்பாற்றினார்.

உடனடியாக தீயணைப்பு துறையினர் போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு அழைத்துச் சென்றனர். மயக்கமடைந்த நிலையில் இருந்த பெண்ணை சிகிச்சைக்காக காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்