Crime: இன்ஸ்டா காதல்! கணவனை உதறி காதலனுடன் சென்ற பெண் கொலை! 5 பேர் கைது!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime: இன்ஸ்டா காதல்! கணவனை உதறி காதலனுடன் சென்ற பெண் கொலை! 5 பேர் கைது!

Crime: இன்ஸ்டா காதல்! கணவனை உதறி காதலனுடன் சென்ற பெண் கொலை! 5 பேர் கைது!

Kathiravan V HT Tamil
Aug 21, 2023 07:30 PM IST

”வேறு ஒருவனை திருமணம் முடித்த ஆத்திரத்திலும், இன்னும் பல ஆண்கள் உடன் இன்ஸ்டாகிராமில் பழகியதையும் கண்டுபிடித்த மனோரஞ்சித் வெறிச்செயல்”

கொலை செய்யப்பட்ட வினோதினி கைது செயப்பட்ட மனோரஞ்சித்
கொலை செய்யப்பட்ட வினோதினி கைது செயப்பட்ட மனோரஞ்சித்

வினோதினி தனது கையில் இருவர் பெயரையும் பச்சை குத்தும் அளவிற்கு காதலித்து வந்துள்ளனர். மேலும் அதோடு மட்டும் இல்லாது, மனோரஞ்சித்தை சந்திக்க அவ்வப்போது தென்காசிக்கு வருவதும், இங்கு திருவிழாவிற்கு வருவதுமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வினோதினிக்கு பெற்றோர்கள் வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடித்து வைத்துள்ளனர். இதனை தெரிந்து கொண்ட மனோரஞ்சித் காதலியை மறக்க முடியாமல் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனே குடும்பத்தினரும் நண்பர்களும் மனோரஞ்சித்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றி உள்ளனர்.

அதன் பின்னரும் தொடர்ந்து வினோதினியை மனோரஞ்சித் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வினோதினி தான் திருமணம் முடித்த கணவரை விட்டு விட்டு கடந்த 20 நாட்களுக்கு முன்பு காதலன் மனோரஞ்சித்தை தேடி கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்திற்கு வந்துள்ளார்.

அதன் பின்னர் ஐந்து நாட்களாக வினோதினி காதலன் மனோரஞ்சித்துடன் வலசை பகுதியில் சுற்றித்திரிந்துள்ளனர். திடீரென இருவருக்கும் மத்தியில் காதல் மோதலாக மாறி உள்ளது. மேலும் தன்னை விட்டு விட்டு வேறு ஒருவனை திருமணம் முடித்த ஆத்திரத்திலும், இன்னும் பல ஆண்கள் உடன் இன்ஸ்டாகிராமில் பழகியதையும் கண்டுபிடித்த மனோரஞ்சித் நண்பர்களான வலசை காலனி பகுதியைச் சேர்ந்த மகா பிரபு (22), பரத் (21), கடையநல்லூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த மணிகண்டன் (20) மற்றும் , 17 வயசு சிறுவன் ஆகிய 5 நண்பர்களின் உதவியுடன் காதலி வினோதினியை காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று நண்பருடன் சேர்ந்து கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் சாக்கு முட்டையில் கட்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பயன்பாடு இல்லாத கிணற்றில் வீசி சென்றுள்ளனர்.

இதனைதொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடலை கண்டறிந்த காவல்துறையினர் கொலையில் சம்பந்தபட்டவர்களை தேடி வந்தனர். இதில் வலசை பகுதியில் சிசிடிவி கேமராகளை ஆய்வு செய்ததில் விலை உயர்ந்த பைக்கில் வினோதினியை மனோ ரஞ்சித் அழைத்து வந்தது தெரிய வந்தது.

மேலும் திடீரென வலசை கிராமத்தில் இருந்து மனோரஞ்சித் உட்பட மூன்று பேர் கோயம்புத்தூருக்கு சென்றது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர் தனிப்படை போலீசார் இன்ஸ்பெக்டர் ராஜா, வேல் பாண்டியன், கருப்பசாமி ஆகியோர் கோயம்புத்தூர் சென்று பதுங்கி இருந்த மூன்று பேரையும் வலசை பகுதியில் இருந்த பரத் மற்றும் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் உட்பட ஐந்து பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து நான்கு பேரை பாளையங்கோட்டை சிறையிலும் 17 வயசு சிறுவனை சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

இன்ஸ்டாகிராம் காதலால் கணவரை உதறிவிட்டு வந்த இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.