Madurai Train Fire: மதுரை ரயிலில் தீ விபத்து நடந்தது எப்படி? - ரயில்வே வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Madurai Train Fire: மதுரை ரயிலில் தீ விபத்து நடந்தது எப்படி? - ரயில்வே வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

Madurai Train Fire: மதுரை ரயிலில் தீ விபத்து நடந்தது எப்படி? - ரயில்வே வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

Karthikeyan S HT Tamil
Aug 26, 2023 09:25 AM IST

மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

மதுரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது.
மதுரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது ரயிலில் இருந்த பயணிகள் சிலர் சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைக்க முயன்போது திடீரென அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ மளமளவென அடுத்தடுத்த ரயில் பெட்டி முழுவதும் பரவியது. இதில் கடைசியாக இருந்த 2 சிறப்பு முன்பதிவு பெட்டிகள் முழுவதும் தீயில் கருகியது. தீ விபத்தையடுத்து ஆன்மிக பயணிகள் அலறியடித்தபடி ரயிலில் இருந்து கீழே இறங்கிய நிலையில் இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. மதுரையில் ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதற்கு சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட சிலிண்டரே காரணம். சட்டவிரோத சிலிண்டரில் பயணிகள் சமையல் செய்ய முயன்ற போது தீ விபத்து ஏற்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதிகாலை 5.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாகவும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காலை 5.45 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலின் இரு பெட்டிகளில் பற்றிய தீ காலை 7.15 மணிக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. புனலூரில் இருந்து வந்த ரயிலில் இணைக்கப்பட்ட இரண்டு பெட்டிகள் மதுரையில் தனியாக பிரிக்கப்பட்டன. நாளை அனந்தபுரி ரயிலில் பெட்டிகள் இணைக்கப்பட்டு சென்னை வழியாக லக்னோ செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்தினால் மதுரை சந்திப்பு வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் இல்லை என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது. தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, காவல்துறை ஐஜி, ரயில்வே உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.