175 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 5,725 மாணவர்களுக்கு ஜூன் முதல் மதிய உணவு திட்டம்.. தமிழக அரசு உத்தரவு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  175 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 5,725 மாணவர்களுக்கு ஜூன் முதல் மதிய உணவு திட்டம்.. தமிழக அரசு உத்தரவு!

175 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 5,725 மாணவர்களுக்கு ஜூன் முதல் மதிய உணவு திட்டம்.. தமிழக அரசு உத்தரவு!

Divya Sekar HT Tamil
May 28, 2024 09:52 AM IST

வரும் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும் உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1 முதல் இந்த மதிய உணவுத்திட்டம் சிறப்புப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.

175 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 5,725 மாணவர்களுக்கு ஜூன் முதல் மதிய உணவு திட்டம்.. தமிழக அரசு உத்தரவு!
175 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 5,725 மாணவர்களுக்கு ஜூன் முதல் மதிய உணவு திட்டம்.. தமிழக அரசு உத்தரவு!

சிறப்புப் பள்ளிகளுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு

 

175 சிறப்பு பள்ளிகளில் காலை வந்து மாலை வீடு திரும்பும் 5725 மாணவர்களுக்கு மதிய உணவினை அரசு பள்ளி சத்துணவு மையத்திலிருந்து வரும் ஜூன் மாதம் முதல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளி சத்துணவு மையத்திலிருந்து சிறப்புப்பள்ளி மையங்களுக்கு உரிய நேரத்தில் மதிய உணவினை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லவும், சிறப்பு பள்ளி பயனாளிகளுக்கு உணவினை முறையாக வழங்கிடவும் பொறுப்பாளர்களை துறை மூலம் நியமிக்க உத்தரவு.

சிறப்புபள்ளி மாணாக்கர்கள் மதிய உணவினை உட்கொள்ள தேவையான தட்டு, டம்ளர் போன்றவற்றையும் மதிய உணவினை சூடாகவும். பாதுகாப்பாகவும் கொண்டு சென்று வழங்குவதற்கான கொள்கலன் மற்றம் உபகரணங்கள் ஏற்பாடு செய்திட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 1 முதல் இந்த மதிய உணவுத்திட்டம் சிறப்புப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.அரசுப் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையத்தில் இருந்து இந்த சிறப்புப் பள்ளிகளுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த மாணவர்களுக்கு மதிய உணவு, அரசுப் பள்ளி சத்துணவு மையத்தில் இருந்து ஜூன் மாதம் முதல் வழங்கப்படும். இது தொடர்பான விவரங்கள் சமூகநலத்துறைக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

மதிய உணவு வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்படும்

முன்னதாக அரசு நிதியுதவி பெறும் 193 தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் 6,006 குழந்தைகளுக்கு இணை உணவு மற்றும் மதிய உணவு வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதற்கு ஏற்படும் கூடுதல் செலவினம் ரூ.15 லட்சத்து 36 ஆயிரத்து 300 நிர்வாக ஒப்பளிப்பும், 2023-24-ம் நிதியாண்டுக்கு 4 மாதங்களுக்கு தேவைப்படும் கூடுதல் செலவினத்தொகை ரூ.9 லட்சத்து 300 நிதி ஒப்பளிப்பும் செய்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கடந்த ஆண்டு டிச.22-ம் தேதி அனுமதி ஆணை பிறப்பித்தது.

மேலும், இத்திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்துவதற்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதற்காக வழிமுறைகளும் வெளியிடப்பட்டன. இதையடுத்து, அரசு நிதி உதவி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையுடன் இணைத்து, பயனாளிகளின் எண்ணிக்கையை மறுநிர்ணயம் செய்து, 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க தக்க நடவடிக்கை எடுக்க உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிறப்புப் பள்ளிகளிலும் மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தப்படும்

இந்நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும் உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1 முதல் இந்த மதிய உணவுத்திட்டம் சிறப்புப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.அரசுப் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையத்தில் இருந்து இந்த சிறப்புப் பள்ளிகளுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.