Coimbatore: கோவையில் பதட்டம்.. கல்லூரி சுற்று சுவர் இடிந்ததில் 5 பேர் பலி.. அலட்சியமான பதில் என மேயர் குற்றச்சாட்டு
Sri Krishna College: இடிப்பாடுகளில் இருந்து நான்கு தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பருன் கோஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலியானவர்களிக் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் செயல்பட்டு வரும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பரிதாபமான உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் கல்லூரி அலட்சியமாக பதில் கூறியதாக மேயர் குற்றம் சாட்டி உள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவ மாணவிகள் தங்கி படிக்க ஏதுவாக விடுதி வசதி உள்ளது.
இந்தக் கல்லூரியில் உள்ள விடுதியை சுற்றி மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பிரம்மாண்ட சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே கட்டப்பட்டிருந்த 5 அடி உயரம் கொண்ட சுற்று சுவர் வலுவிழந்து இருந்தது. இதனால் அந்த வலுவிழந்த சுவரை ஒட்டி 5 அடி உயரத்தில் கான்கிரீட்டால் ஆன மற்ற சுவர் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் கட்டுமான பணிகள் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த வெளி மாநில தொழிலாளர்கள் 6 பேர் சிக்கினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்பு பணி மேற்கொண்டதுடன், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த இடிபாடுகளில் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேசமயம் இடிப்பாடுகளில் சிக்கிய நான்கு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிப்பாடுகளில் இருந்து நான்கு தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பருன் கோஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலியானவர்களிக் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்த தொழிலாளர்கள் கண்ணையன், ஜெகநாதன், சச்சிம் ஆகியோர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் பிபில்போயால் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து கோவை மாட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, ஆணையர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் விபத்து குறித்து மேயர் கல்பனா கல்லூரி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியபோது அலட்சியமாக பதில் கூறியதாக குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து மாநகராட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்