Tirupattur: திருப்பத்தூர் அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 5 பேர் பலி!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு பேருந்தும் தனியார் சொகுசு பேருந்தும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு உள்ளானது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு பேருந்தும் தனியார் சொகுசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு பேருந்தும் தனியார் சொகுசு பேருந்தும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு உள்ளானது. வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் பகுதியில் அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
பெங்களூரில் இருந்து வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவற்றை உடைத்து சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதாக தெரிகிறது.
இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து பேருந்தில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்