Chennai Building Collapse: சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai Building Collapse: சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து!

Chennai Building Collapse: சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 19, 2023 06:34 PM IST

கட்டிடத்தை புணரமைக்கும் பணியில் 10 பேர் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து
4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

சென்னை பாரிமுனை கார்னர் அரண்மனை அர்மேனியன் தெரு அருகே உள்ள 4 மாடி கட்டிடம் ஒன்று இன்று எதிர்பாராத இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்பகுதியில்  பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. கட்டிடத்தை புணரமைக்கும் பணியில் 10 பேர் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.  

இந்நிலையில் சுமார் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கியது சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து எனலாம். பிரம்மாண்டமான 11 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் உயிரிழந்தார்கள். ஏராளமானோர் காயமடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.