விளாத்திகுளம் அருகே ரூ. 60 லட்சம் மதிப்புள்ள 350 கிலோ கஞ்சா பறிமுதல்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  விளாத்திகுளம் அருகே ரூ. 60 லட்சம் மதிப்புள்ள 350 கிலோ கஞ்சா பறிமுதல்

விளாத்திகுளம் அருகே ரூ. 60 லட்சம் மதிப்புள்ள 350 கிலோ கஞ்சா பறிமுதல்

Karthikeyan S HT Tamil
Oct 04, 2022 10:10 AM IST

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகே வேனில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ. 60 லட்சம் மதிப்புள்ள 350 கிலோ கஞ்சா பொட்டலங்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

<p>350 கிலோ கஞ்சா பறிமுதல்</p>
<p>350 கிலோ கஞ்சா பறிமுதல்</p>

தமிழகத்தில் கஞ்சா, புகையிலை, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தல், பதுக்கல், விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரைக் கைது செய்ய வேண்டும். அவர்களின் வங்கிக் கணக்குகள், சட்ட விரோத சொத்துகளை முடக்க வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார். இதற்கான நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் கஞ்சா 2.0' என்று பெயர் வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் கஞ்சா கடத்தல், விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனா்.

இந்த சூழலில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த கலைஞானபுரம் காட்டுப் பகுதிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக கஞ்சா கடத்திக்கொண்டுவரப்பட்டுள்ளதாக சூரங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் போலீஸார், கலைஞானபுரம் கருவேலங்காட்டு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் கூரியர் வேன் மற்றும் டாடா ஏஸ் வாகனத்தை போலீஸார் சோதனை செய்தபோது 350 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

 

<p>கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.</p>
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வாகனங்கள், 350 கிலோ கஞ்சா பொட்டலங்கள், 6 கேன்களில் இருந்த மண்ணெண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்த இவை கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்த கஞ்சாவின் மதிப்பு ரூ.60 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.