உரிமையியல் நீதிபதி பதவி நேர்முக தேர்வு அறிவிப்பு.. இதோ முழுவிவரம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  உரிமையியல் நீதிபதி பதவி நேர்முக தேர்வு அறிவிப்பு.. இதோ முழுவிவரம்!

உரிமையியல் நீதிபதி பதவி நேர்முக தேர்வு அறிவிப்பு.. இதோ முழுவிவரம்!

Divya Sekar HT Tamil
Jan 25, 2024 03:10 PM IST

உரிமையியல் நீதிபதி பதவி நேர்முக தேர்வு வரும், 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 10 வரை, நேர்முக தேர்வு நடக்க உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., செயலர் கோபால சுந்தர்ராஜ் அறிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி

இந்நிலையில் உரிமையியல் நீதிபதி பதவிக்கான நேர்முக தேர்வு வருகிற 29ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை (பிப்ரவரி 3ம் தேதி, 4ம் தேதி, சனி, ஞாயிறு நீங்கலாக) ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தமிழக உரிமையியல் நீதிமன்றங்களில், உரிமை யியல் பதவிகளில், 245 காலியிடங்களை நிரப்ப, டிஎன்பிஎஸ்சி., சார்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19ல், முதல்நிலை தகுதி தேர்வு நடந்தது. இதில், 12,000 பேர் பங்கேற்றனர். இதற்கான முடிவுகள் அக்டோப ரில் வெளியாகின. தேர்வில், 2,500 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பரின் பிரதான தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், ஜனவரி 4ல் வெளியாகின. இதில், அடுத்து நடக்க உள்ள நேர்முக தேர்வுக்கு, 472 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கு வரும், 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 10 வரை, நேர்முக தேர்வு நடக்க உள்ளதாக, டிஎன்பிஎஸ்சி, செயலர் கோபால சுந்தர்ராஜ் அறிவித்துள்ளார்.

பட்டியலில் இடம் பெற்றுள்ள தேர்வர்கள் அசல் சான்றிதழ்களை எடுத்துவர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் இணையவழி விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளவாறு அனைத்து மூலச்சான்றிதழ்களையும் நேரில் கொண்டு வர வேண்டும். நேர்முக தேர்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு குறிப்பாணையினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விவரங்கள் தெரிவிக்கப்படும். நேர்முக தேர்விற்கு அழைப்பாணை தனியே அனுப்பப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்விற்கு உரிய நாளில், நேரத்தில் கலந்து கொள்ள தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படாது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.