தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kallakurichi: தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம்.. பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

Kallakurichi: தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம்.. பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

Karthikeyan S HT Tamil
Jun 20, 2024 07:57 AM IST

Kallakurichi Illicit liquor: கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

Kallakurichi: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விவகாரம்.. பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு
Kallakurichi: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விவகாரம்.. பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம்‌ காலனி பகுதியில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை சிலர் குடித்துள்ளனர். அன்று இரவு அதில் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

45-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கருணாபுரத்தை சோ்ந்த கணேசன் மகன் பிரவீன்(29), சிவா (32), மகேஷ் (60), ஜெகதீசன் (70), ஏசுதாஸ் (36), கண்ணன் (70), குரு (48), மணி (48), சங்கா் (35), பொியசாமி (40), சுப்பிரமணியன் (56), பரமசிவம் (56), குரு (44), செந்தில், சுரேஷ், குப்பன் மனைவி இந்திரா, சுரேஷ் மனைவி வடிவு (35), ரஞ்சித்குமாா் (37), கிருஷ்ணமூா்த்தி உள்பட 45-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.