Israel War: ’இஸ்ரேலில் இருந்து 147 தமிழர்கள் இதுவரை தாயகம் திரும்பி உள்ளனர்!’ தமிழக அரசு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Israel War: ’இஸ்ரேலில் இருந்து 147 தமிழர்கள் இதுவரை தாயகம் திரும்பி உள்ளனர்!’ தமிழக அரசு

Israel War: ’இஸ்ரேலில் இருந்து 147 தமிழர்கள் இதுவரை தாயகம் திரும்பி உள்ளனர்!’ தமிழக அரசு

Kathiravan V HT Tamil
Oct 18, 2023 06:12 PM IST

”தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 158 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களுடன் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்களின் தேவைகள் கண்டறியபட்டது”

இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் - கோப்புப்படம்
இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் - கோப்புப்படம்

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இஸ்ரேல் - பாலஸ்தீனம்  நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது தீவிரமடைந்த நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 158 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களுடன் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்களின் தேவைகள் கண்டறியபட்டது. அதன் அடிப்படையில் , இதுவரை நான்கு கட்டங்களாக புது தில்லி வந்த 98 தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழ்நாடு அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று (17.10.2023) நள்ளிரவு இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் முலம் புதுதில்லி வந்தடைந்த 23 தமிழர்கள் தமிழ்நாடு அரசினால் வரவேற்கப்பட்டு, விமான பயணச்சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டது,    கோயம்பத்தூர் விமான நிலையம் வந்த 4 நபர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றம் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் திரு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வரவேற்று , அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசின் செலவில் ஏற்பாடு செய்த வாகனங்களில் அனுப்பி வைத்தார். 

மேலும் சென்னை விமான நிலையம் வந்த 17 நபர்களை மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் மரு.கலாநிதி வீராசாமி அவர்கள், அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் திருமதி.ஜெசிந்தா லாசரஸ் இ.ஆ.ப., மற்றும் துறை அலுவலர்கள்  வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். அதே போன்று மதுரை விமான நிலையம் வந்த 2 நபர்கள்  மாவட்ட நிர்வாகத்தால் வரவேற்கப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பி வைத்தனர்.  

இதுவரை, இந்நேர்வில் இஸ்ரேலில் இருந்து 121  தமிழ்நாடு அரசின் செலவிலும், 26 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.