12 th Exam: All the best Students.. தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் வழக்கம் போல் தமிழ் பாடத் தேர்வு நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் வழக்கம் போல் தமிழ் பாடத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் பயின்ற 3 லட்சத்து 58 ஆயிரத்து 201 மாணவர்கள் மற்றும் 4 லட்சத்து 13ஆயிரத்து 998 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் எழுதுகிறார். மொத்தம் 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பேர் எழுத உள்ளனர். இது தவிர தனித்தேர்வர்கள் 21 ஆயிரத்து 875 பேரும் சிறைவாசிகள் 125 பேரும் எழுதுகின்றர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வறைக்குள் செல்போன் உள்ள பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் தேர்வு அறையில் காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை பிடிக்க 3 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் 43 ஆயிரத்து 200 தேர்வறை கண்காணிப்பாளர்கள் தேர்வு நடித்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
தேர்வின் முதல் நாளான இன்று தமிழ் தேர்வு நடைபெறும் நிலையில் வரும் 5ம் தேதி ஆங்கில தேர்வு நடைபெற உள்ளது. பின்னர் நடைபெறும் தேர்வுகளுக்கு இடையே 3 முதுல் 4 நாட்கள் இடைவெளி உள்ளது. இன்று தொடங்க உள்ள பொதுத் தேர்வு வரும் 22ம் தேதி வரை நடைபெறுகிறது.
மேலும் தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகளுடன் மைய்ங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் 4 ம் தேதி பிளஸ் 1 மாணவர்களுக்கான தேர்வு தொடங்க உள்ளது. வரும் 25 தேதியுடன் தேர்வு நிறைவடையும். மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 26 ந்தேதி தொடங்கும் பொதுத்தேர்வு வரும் ஏப்ரல் 8 ந்தேதியுடன் நிறைவடையும்.
இதனால் தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
தேர்வு எழுதும் மாணவர்களின் பதற்றத்தை தவிர்க்க உதவும் வழிகள்
1.இடைவெளிகள் மற்றும் போதுமான ஓய்வை உள்ளடக்கிய யதார்த்தமான ஆய்வு அட்டவணையைத் திட்டமிடுங்கள். சிறிய, அடையக்கூடிய இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். சோர்வைத் தவிர்க்க தேவையான இடைவெளிகளை எடுப்பதோடு சிக்கலான தலைப்புகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
2.ஆழ்ந்த சுவாசம், தியானம், முற்போக்கான தசை தளர்வு அல்லது யோகா போன்ற தளர்வு நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கும்.
3.கடைசி நிமிட பீதியைக் குறைக்க ஆய்வுப் பொருட்கள், குறிப்புகள் மற்றும் பிறவற்றை ஒழுங்கமைக்கவும். ஒழுங்கீனம் இல்லாத படிப்பு சூழல் கவனம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவும்.
4.போதுமான தூக்கம், ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி போன்ற சுய பாதுகாப்பு நடைமுறைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.
5.படிப்பதற்கு இடையில் வழக்கமான இடைவெளிகளை எடுக்க மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்
டாபிக்ஸ்