12th Supplement Exam Result : மாணவர்கள் கவனத்திற்கு.. 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகிறது!
12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வருகிற 24ஆம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மே 8ம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இத்தேர்வை மொத்தம் 8,03,385 மாணவ, மாணவிகள் எழுதிய நிலையில், 7,55,451 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 47 ஆயிரத்து 387 பேர் தோல்வியடைந்துள்ளனர்.
இந்நிலையில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி முதல் உடனடி சிறப்பு துணைத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் மே 15ஆம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தேர்வுக்கு செல்லாத மாணவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி முதல் 2ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வருகிற 24ஆம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள், தேர்வு முடிவினை மதிப்பெண் பட்டியலாக வரும் வருகிற 24ஆம் தேதி பிற்பகல் முதல் இணையதளத்திலிருந்து தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. பட்டியலை http://www.dge.tn.in என்ற முகவரிக்குள் சென்று Result என்ற வாசகத்தை தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் தோன்றும் பக்கத்தில் "HSE Second Year Supplementary Exam, Jun/Jul 2023. Result-Statement Of Marks Download" என்ற வாசகத்தை தேர்வு செய்து தேர்வர்கள் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களது மதிப்பெண் பட்டியலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
ஜூன்/ஜூலை 2023, மேல்நிலை துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு ஜூலை 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில் (தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மயிலாடுதுறை செங்கல்பட்டு) முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று தேர்வர்கள் பதிவு செய்துக்கொள்ளலாம். விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஒரு பாடத்திற்கும் ரூ.275-ம், மறு கூட்டல் செய்ய உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305-ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணம் செலுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்