நெகிழ்ச்சி சம்பவம்..மரணத்திலும் இணைபிரியாத 104 வயது அக்கா... 102 வயது தம்பி!
Vaniyambadi: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வயது மூப்புக் காரணமாக அக்கா உயிரிழந்த நிலையில், துக்கம் தாங்காமல் தம்பியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வயது மூப்புக் காரணமாக அக்கா உயிரிழந்த செய்தி கேட்டு, துக்கம் தாங்காமல் தம்பியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள செட்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்த சின்னக்கண்ணு என்பவரின் மனைவி வள்ளியம்மாள் (வயது 104). கடந்த சில மாதங்களாக வள்ளியம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், வயது மூப்புக் காரணமாக நேற்று இரவு தூக்கத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, அதே ஊரில் வசித்து வரும் வள்ளியம்மாளின் தம்பி துரைசாமி (வயது 102) என்பவருக்கு அக்கா காலமான செய்தியை தெரியப்படுத்தி இருக்கின்றனர். இன்று காலை எழுந்தவுடனே அக்கா உயிரிழந்த தகவல் அறிந்த அவர் மிகுந்த வேதனை அடைந்தார். பின்னர் சிறிது நேரத்தில் உட்கார்ந்திருந்த இடத்திலேயே துரைசாமி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அக்கா உயிரிழந்த அதிர்ச்சியில் தம்பியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அக்கா, தம்பியின் பாசம் கேட்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
மேலும், மறைந்த வள்ளியம்மாள் மற்றும் துரைசாமியின் உடல்களுக்கு சடங்குகள் செய்யப்பட்டு இன்று மாலை அதே ஊரில், அருகருகே அடக்கம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வள்ளியம்மாளின் கணவர் சின்னக்கண்ணு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள், 4 மகள்களும், 43 பேரக் குழந்தைகளும் உள்ளனர். அதேபோல், அவரது தம்பி துரைசாமிக்கு 4 மகன்களும், 2 மகள்களும், 57 பேரக் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்