Zimbabwe: ODI கிரிக்கெட்டில் 400 ரன்களை முதல்முறையாக கடந்த ஜிம்பாப்வே!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Zimbabwe: Odi கிரிக்கெட்டில் 400 ரன்களை முதல்முறையாக கடந்த ஜிம்பாப்வே!

Zimbabwe: ODI கிரிக்கெட்டில் 400 ரன்களை முதல்முறையாக கடந்த ஜிம்பாப்வே!

Manigandan K T HT Tamil
Jun 26, 2023 04:33 PM IST

Zimbabwe vs United States: கேப்டன் சியான் வில்லியம்ஸ் நிதானமாக விளையாடி 174 ரன்களை விளாசினார். 101 பந்துகளில் 174 ரன்களை எடுத்திருந்தபோது அவர் அபிஷேக் பரத்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஜிம்பாப்வே கேப்டன் சியான் வில்லியம்ஸ்
ஜிம்பாப்வே கேப்டன் சியான் வில்லியம்ஸ் (@ICC)

குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள ஜிம்பாப்வே, யுஎஸ்ஏ ஆகிய அணிகள் இன்று குரூப் பிரிவில் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு ஜிம்பாப்வே முன்னேறிவிட்டது. இன்றைய ஆட்டத்தில் யுஎஸ்ஏவுடன் மோதியது ஜிம்பாப்வே. டாஸ் வென்ற யுஎஸ்ஏ பவுலிங்கை தேர்வு செய்தது.

ஹராரேவில் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்கியது.

இதையடுத்து, முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 408 ரன்கள் விளாசியது.

ஒரு நாள் கிரிக்கெட்டில் 400 ரன்களை ஜிம்பாப்வே அணி கடந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கும்பி 78 ரன்களும், சிகந்தர் ராஸா 48 ரன்களும் விளாசினர்.

கேப்டன் சியான் வில்லியம்ஸ் நிதானமாக விளையாடி 174 ரன்களை விளாசினார். 101 பந்துகளில் 174 ரன்களை எடுத்திருந்தபோது அவர் அபிஷேக் பரத்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ரயான் பர்ல் 47 அடித்து ஆட்டமிழந்தார். விளையாடிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் எடுத்தனர்.

அதிகபட்சமாக யுஎஸ்ஏ சார்பில் அபிஷேக் பரத்கர் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

409 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யுஎஸ்ஏ விளையாடவுள்ளது.

உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் குரூப் ஏ பிரிவில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம், யுஎஸ்ஏ ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன், அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

குரூப் ஏ பிரிவில் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் 3 ஆட்டங்களிலும் ஜெயித்து 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது ஜிம்பாப்வே.

நெதர்லாந்து அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2இல் ஜெயித்து ஒன்றில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் 3 ஆட்டங்களில் ஆடி 2 இல் ஜெயித்திருக்கிறது.

இந்த மூன்று அணிகளும் சூப்பர் சிக்ஸ் சுற்று முன்னேறிவிட்டன.

நேபாளம், யுஎஸ்ஏ ஆகிய அணிகள் வெளியேறிவிட்டன.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.