Yash Dhull: எமர்ஜிங் டீம் ஆசிய கோப்பை கிரிக்கெட்-இந்தியா ஏ அணி கேப்டன் யஷ் துல்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Yash Dhull: எமர்ஜிங் டீம் ஆசிய கோப்பை கிரிக்கெட்-இந்தியா ஏ அணி கேப்டன் யஷ் துல்

Yash Dhull: எமர்ஜிங் டீம் ஆசிய கோப்பை கிரிக்கெட்-இந்தியா ஏ அணி கேப்டன் யஷ் துல்

Manigandan K T HT Tamil
Jul 04, 2023 08:36 PM IST

வெஸ்ட் இண்டீஸ் நடைபெற்ற 2022 ஐ.சி.சி 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்தார் யஷ் துல்.

இளம் கிரிக்கெட் வீரர் யஷ் துல்
இளம் கிரிக்கெட் வீரர் யஷ் துல் (@BCCI)

கொழும்பில் ஜூலை 13 முதல் ஜூலை 23 வரை நடைபெறவுள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆண்கள் எமர்ஜிங் டீம்ஸ் ஆசிய கோப்பை 2023-க்கான இந்தியா ஏ அணியை ஜூனியர் கிரிக்கெட் கமிட்டி தேர்வு செய்துள்ளது.

இந்த அணியை யஷ் துல் வழிநடத்தவுள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் யஷ் துல்.

வெஸ்ட் இண்டீஸ் நடைபெற்ற 2022 ஐ.சி.சி 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்தார் யஷ் துல்.

ராஜ்வர்தன் ஹங்கர்கேகரும் அணியில் இடம் பெற்றுள்ளார். ஐபிஎல் 2023 சீசனில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல்ரவுண்டராக ஹங்கர்கேகர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸின் ஐபிஎல் 2023 வெற்றி அணியில் இடம்பெற்றிருந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங்கும் அணியில் உள்ளார்.

பிரப்சிம்ரன் சிங், துருவ் ஜூரேல் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் அணியில் உள்ளனர்.

இந்தியா ஏ பி பிரிவில் உள்ளது. நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏ, பாகிஸ்தான் ஏ அணிகளும் பி குரூப்பில் உள்ளன.

இலங்கை ஏ, வங்கதேசம் ஏ, ஆப்கானிஸ்தான் ஏ, ஓமன் ஏ அணிகள் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

முதல் அரையிறுதியில் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கும், குரூப் பி பிரிவில் இருந்து 2-வது இடம் பிடிக்கும் அணிக்கும் இடையேயும், 2-வது அரையிறுதியில் குரூப் பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கும் குரூப் ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு இடையே ஜூலை 21-ம் தேதி நடைபெறும். இறுதிப் போட்டி ஜூலை 23-ம் தேதி நடைபெறுகிறது.

இந்தியா ஏ அணி: சாய் சுதர்சன், அபிஷேக் சர்மா (துணை கேப்டன்), நிகின் ஜோஸ், பிரதோஷ் ரஞ்சன் பால், யாஷ் துல் (கேப்டன்), ரியான் பராக், நிஷாந்த் சிந்து, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், யுவராஜ்சிங் தோடியா, ஹர்ஷித் ராணா, ஆகாஷ் சிங், நிதிஷ் குமார் ரெட்டி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.

காத்திருப்பு வீரர்கள் பட்டியல்: ஹர்ஷ் துபே, நேஹல் வதேரா, ஸ்னெல் படேல், மோஹித் ரெட்கர்

பயிற்சியாளர்கள்: சிதான்ஷு கோடக் (தலைமை பயிற்சியாளர்), சாய்ராஜ் பகுதுலே (பந்துவீச்சு பயிற்சியாளர்), முனிஷ் பாலி (பீல்டிங் பயிற்சியாளர்)

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.