WTC Final: இந்திய அணியை மீட்ட ரஹானே - ஷர்துல் ஜோடி! Follow On தவிர்ப்பு
உணவு இடைவேளைக்கு முன்னர் வீசப்பட்ட கடைசி ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டான போதிலும் அது நோபால் ஆக அமைய சிறப்பாக பேட் செய்து வந்த ஷர்துல் தாக்கூர் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசய நிலையில் தப்பித்தார். இக்கட்டான நிலையிலிருந்து மீண்டு Follow Onஐ இந்திய அணி நெருங்கியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மூன்றாவது நாளான இன்று உணவு இடைவேளை வரை இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. பாலே ஆன் தவிர்க்க இந்தியாவுக்கு இன்னும் 9 ரன்கள் மட்டுமே மீதமுள்ளது. தற்போது வரை ரஹானே 89, ஷர்துல் தாக்கூர் 36 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் அவுட்டான நிலையில், ரஹானே 29, பரத் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே ஸ்ரீகர் பரத்தை கிளீன் போல்ட்டாக்கி வெளியேற்றினார் ஆஸ்திரேலியா பவுலர் போலாந்து.
இவரை தொடர்ந்து பேட் செய்ய வந்த ஷர்துல் தாக்கூர், ரஹானேவுடன் இணைந்து நிதானமாக பேட் செய்தார். இருவரும் ஆரம்பத்தில் பொறுமையாக பேட் செய்து ரன்களை குவித்தனர். நன்கு செட்டான பிறகு கியரை ஷிப்ட் செய்த ரஹானே, ஆஸ்திரேலியா பவுலர்களின் பந்து வீச்சை அடித்து ஆட ஆரம்பித்தார்.
இதையடுத்து அரைசதத்தை பூர்த்தி செய்த ரஹானே, தொடர்ந்து ரன்குவிப்பில் ஈடுப்பட்டார். அவருடன் ஷர்துல் தாக்கூரும் இணைந்து தன் பங்குக்கு ரன்களை அடித்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
இன்றைய நாள் தொடக்கத்தில் இக்கட்டான நிலையில் இருந்த இந்திய அணி, தொடக்கத்திலேயே ஒரு விக்கெட்டை இழந்தபோதிலும், பின்னர் மெதுவாக மீண்டு Follow Onஐ ஆவதை தவிர்க்க 9 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலைக்கு வந்துள்ளது.
இந்திய அணியை மீட்ட ரஹானே - ஷர்துல் தாக்கூர் ஜோடி 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.
உணவு இடைவேளைக்கு முன் வீசப்பட்ட கடைசி ஓவரில் கம்மின்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார் தாக்கூர். அதற்கு அவர் ரிவ்யூ கேட்டார். இதில் கம்மின்ஸ் வீசிய பந்து நோபாலாக அமைந்த நிலையில் தாக்கூர் தப்பித்தார்.
ஆஸ்திரிலேயா பவுலர்களில் போலாந்து 2 விக்கெட்டுகளை வீழத்தியுள்ளார். மற்ற பவுலர்களான ஸ்டார்க், கம்மின்ஸ், கேமரூன் க்ரீன், லயன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
ஆஸ்திரிலேயா அணி தனது முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தற்போதைய நிலையில் 209 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய அணிக்கு இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே மீதம் உள்ளன.
இந்திய அணியில் இனி வரும் பேட்ஸ்மேன்கள் அனைவரும் டெயிலெண்டர்களாக உள்ளனர்.
டாபிக்ஸ்