WTC Final 2023: ரிப்பீட்டாகும் 20 வருட பிளாஷ்பேக்! முதல் நாளில் ஆஸி., ஆதிக்கம் - இந்தியாவுக்கு நெருக்கடி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Wtc Final 2023: ரிப்பீட்டாகும் 20 வருட பிளாஷ்பேக்! முதல் நாளில் ஆஸி., ஆதிக்கம் - இந்தியாவுக்கு நெருக்கடி

WTC Final 2023: ரிப்பீட்டாகும் 20 வருட பிளாஷ்பேக்! முதல் நாளில் ஆஸி., ஆதிக்கம் - இந்தியாவுக்கு நெருக்கடி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 08, 2023 04:58 PM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முதல் நாளில் ஆஸ்திரேலியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தை பார்க்கையில் 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டி ரீப்பீட் ஆகியிருப்பது போல் அமைந்துள்ளது.

நான்காவது விக்கெட்டுக்கு 251 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ட்ராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித்
நான்காவது விக்கெட்டுக்கு 251 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ட்ராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித் (Action Images via Reuters)

இன்று நடைபெற்ற மூன்று செஷன்களில் முதலாவது செஷனில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் சம அளவில் ஆதிக்கம் செலுத்தினர்.

இதன் பின்னர் நடைபெற்ற மீதமுள்ள இரண்டு செஷனிலும் ஆஸ்திரேலியா அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. ட்ராவிஸ் ஹெட் பேட்டிங் செய்ய தொடங்கியது முதல் அதிரடியாக பேட் செய்து விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டார்.

156 பந்துகளை எதிர்கொண்டு 146 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்நகாமல் இருந்தார். இதில் 22 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

அதேபோல் பொறுமயாக பேட் செய்த ஸ்டீவ் ஸ்மித் 227 பந்துகளை எதிர்கொண்டு 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இவர் தனது இன்னிங்ஸ் 14 பவுண்டரிகளை அடித்தார். இன்னும் சதத்துக்கு அவர் 5 ரன்கள் மீதம் உள்ளது.

இந்திய பெளலர்களில் முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் 2003ஆம் ஆண்டு தென்ஆப்பரிக்காவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பெளலிங்கை தேர்வு செய்தது. இதற்கு காரணமாக மேமூட்டமாக இருக்கும் சூழ்நிலையை சாதமாக்கி கொள்ள முயற்சிப்பதாக கேப்டன் கங்குலி தெரிவித்தார்.

2003 உலகக் கோப்பை ஒரு நாள் இறுதிப்போட்டியின் டாஸ் நிகழ்வில் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்திய கேப்டன் செளரவ் கங்குலி
2003 உலகக் கோப்பை ஒரு நாள் இறுதிப்போட்டியின் டாஸ் நிகழ்வில் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்திய கேப்டன் செளரவ் கங்குலி

சர்ப்ரைஸாக அந்த போட்டி கடைசியாக இந்தியா - ஆஸ்திரேலியா மோதிக்கொண்ட ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியாக அமைந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 359 ரன்கள் குவித்தது. இந்திய பெளலர்கள் மீது ஆஸ்திரிலியா பேட்ஸ்மேன்கள் முழுமையான ஆதிக்கம் செலுத்தினர்.

அதேபோல் இன்றைய போட்டியிலும் டாஸ் வென்ற இந்தியா மேகமூட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதலில் பெளலிங்கை தேர்வு செய்தது.

அன்றைய போட்டியை போல் இன்றைய ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா பெளலர்கள் இந்திய பெளலர்களுக்கு எதிராக முழுமையாக ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இதனால் 20 ஆண்டு கால பிளாஷ்பேக் ரிப்பீட்டாகுமா என்கிற அச்சம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.