WTC Final 2023: கலக்கிய சிராஜ்! ஆஸி.,யை காலி செய்த இந்தியா வேகப்பந்து வீச்சாளர்கள்
இந்திய பவுலர்களில் உமேஷ் யாதவ் தவிர மற்ற அனைவரும் விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், ஆஸ்திரேலியா அணியை மிகப் பெரிய ஸ்கார் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தப்பட்டனர். அந்த அணியின் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் தடுமாறினர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆகியுள்ளது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்திருந்தது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது நாள் உணவு இடைவேளை வரை அடுத்த நான்கு விக்கெட்டுகளை இழந்து 422 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பின்னர் இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா கூடுதலாக 47 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக ஹெட் 163, ஸ்மித், 121 ரன்கள் எடுத்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக மிடில் ஆர்டரில் பேட் செய்ய வந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரி 48 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய பவுலர்கள் இன்று காலை முதல் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் விதமாக பவுலிங் செய்தனர். சீரான இடைவெளியில் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அந்த அணியில் மிடில் ஆர்டரில் பேட் செய்த ஸ்மித் - ஹெட் தவிர வேறு பார்ட்னர்ஷிப் பெரிதாக அமையவில்லை. இவர்கள் இருவர் மட்டும் இணைந்து 285 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இந்திய பவுலர்களில் முகமது சிராஜ் அச்சுறுத்தும் விதமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரைத் தொடர்ந்து முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்பின்னரான ஜடேஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
முன்னதாக உணவு இடைவேளைக்கு பின்னர் லோயர் அலெக்ஸ் கேரி - பேட் கம்மின்ஸ் ஆகியோர் விக்கெட் சரிவை தடுத்து ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கேரி விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தி திருப்புமுனை தந்தார்.
இந்த விக்கெட்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் டெயிலெண்டர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்