WTC Final 2023: சுப்மன் கில்லுக்கு 115 சதவீதம் அபராதம் விதிப்பு - ஏன் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Wtc Final 2023: சுப்மன் கில்லுக்கு 115 சதவீதம் அபராதம் விதிப்பு - ஏன் தெரியுமா?

WTC Final 2023: சுப்மன் கில்லுக்கு 115 சதவீதம் அபராதம் விதிப்பு - ஏன் தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Jun 12, 2023 03:41 PM IST

Shubman Gill: இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லுக்கு அபராதம் விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுப்மன் கில்
சுப்மன் கில் (PTI)

லண்டன் ஓவலில் நடந்த உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தண்டாயுதம் ஆஸ்திரேலிய அணிக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியை அடுத்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் 4 வகையான கோப்பையையும் வென்ற முதல் அணி என்ற புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்திய அணியின் தோல்வி கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது சச்சின், ரவி சாஸ்த்ரி உள்ளிட்ட மூத்த கிரிக்கெட்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தோல்விக்கு கேப்டன் ரோஹித் சர்மாவின் அணித் தேர்வும், இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலான பேட்டிங்கும் தான் காரணம் என பலரும் சமூகவலைத்தளங்களில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்திய அணியின் மோசமான பேட்டிங் தான் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் "இந்திய அணியின் மோசமான பேட்டிங் தான் இந்த தோல்விக்கு காரணம். 7 விக்கெட்டுகள் கையில் வைத்துக் கொண்டு ஒரு செஷன் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பது பரிதாபமாக இருக்கிறது' என்று தெரிவித்திருந்தார்.

இந்திய அணியின் தோல்வி குறித்து விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்து வரும் சூழலில், சுப்மன் கில்லுக்கு 115 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 3-வது நடுவரின் முடிவை விமர்சிக்கும் வகையில் சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்டதற்காக சுப்மன் கில்லுக்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே மெதுவாக பந்து வீசியதற்காக போட்டிக்கான முழு ஊதியமும், அதாவது 100 சதவீதம் இந்திய அணிக்கு அபராதமாக விதிக்கப்பட்ட நிலையில், சுப்மன் கில் 115 சதவீதம் அபராதம் கட்ட வேண்டி இருக்கும்.

முன்னதாக, 4 ஆம் நாள் ஆட்டத்தின் போது சுப்மன் கில் கொடுத்த கேட்சை கேமரூன் க்ரீன் சரியாக பிடித்ததாக 3-வது நடுவர் அவுட் கொடுத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சுப்மன் கில் நடுவரின் முடிவை விமர்சனம் செய்திருந்தார். நடுவரின் முடிவை விமர்சிக்கும் வகையில், தலையில் அடித்துக் கொள்வது போன்ற எமோஜிக்களை அவர் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், சுப்மன் கில்லுக்கு 115 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.