WTC Final 2023: 2 முக்கிய வீரர்கள் கிடையாது! 4 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு ஸ்பின்னருடன் களமிறங்கும் இந்தியா
இங்கிலாந்தில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு அணிக்கு தேவையான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். அத்துடன் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு ஸ்பின்னருடன் இந்தியா களமிறங்குகிறது.
உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பெளலிங்கை தேர்வு செய்துள்ளார்.
"மேகமூட்டமான சூழ்நிலை காரணமாக பெளலிங்கை தேர்வு செய்துள்ளோம். நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு ஸ்பின்னருடன் களமிறங்குகிறோம்.
அத்துடன் இங்குள்ள சூழலை கருத்தில் கொண்டு அஸ்வின் அணியில் சேர்க்கப்படாத கடிமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு மேட்ச் வின்னர்." என்றார்.
ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸும், முதலில் பெளலிங் செய்ய விரும்பியதாக தெரிவித்ததுடன், ஜோஷ் ஹசில்வுட்டுக்கு பதிலாக ஸ்காட் போலாந்த் விளையாட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர், கவாஜா, ட்ரேவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரே, மிட்செல் ஸ்டார்க் 5 இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்து அஸ்வின் சேர்க்கப்படாமல் இருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக இருப்பதுடன், அந்த அணிக்கு சாதகமான விஷயமாகவே அமைந்திருப்பதாக பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
இரு அணிகளின் விவரம்:
இந்தியா: ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சத்தேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, ஸ்ரீகர் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரே (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), முகமது ஷமி, முகமது சிராஜ்
டாபிக்ஸ்