WTC Final 2023: மிரட்டிய இந்திய பெளலர்கள்! நிதானம் காட்டிய ஆஸி. பேட்ஸ்மேன்கள் - உணவு இடைவேளை வரை 2 விக்கெட்டுகள் இழப்பு
முதல் நாள் உணவு இடைவேளை வரை வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் பயன்படுத்தியுள்ளார் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா. இதன் விளைவாக ஆஸ்திரேலியா ஓபனர்கள் இருவரின் விக்கெட்டும் வீழ்த்தப்பட்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பெளலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸ்திரிலேயா அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரிலேயா ஓபனிங் பேட்ஸ்மேன்களாந கவாஜா டக் அவுட்டாகி முதல் விக்கெட்டாக வெளியேறினார். முகமது சிராஜ் வீசிய அவுட்சைடு ஆஃப்ஸ்டம்ப் அதிக வேக பந்த தொட முயற்சித்து எட்ஜ் ஆகி வீக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத்திடம் சிக்கினார். அப்போது அணியின் ஸ்கோர் 2 என இருந்தது.
இதன் பின்னர் பேட் செய்ய வந்த லபுஸ்சேன் நிதானமாக பேட்டிங்கை தொடர்ந்தார். ஆரம்பத்தில் இந்திய பெளலர்களின் மிரட்டலான பந்து வீச்சை டிபெண்ட் செய்து வந்த வார்னர், பின் நன்கு செட்டிலான பிறகு ரன் குவிப்பில் ஈடுபட தொடங்கினார்.
முதல் ஸ்பெல்லாக முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் 12 ஓவர்கள் வரை வீசினார். இதைத்தொடர்ந்து உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர் அடுத்த ஸ்பெல்லை வீசினார்.
உமேஷ் யாதவ் தனது இரண்டாவது ஓவரில் 4 பவுண்டரிகளை விட்டுக்கொடுத்து ரன்களை வாரி வழங்கினார். அந்த ஓவரில் 4 பவுண்டரிகளையும் வார்னர் அடித்தார்.
இதையடுத்து ஆட்டத்தின் 21வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசிய லெக் சைட் பவுன்சரில் பைன் லெக் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சித்து பிடிபட்டார் வார்னர். இந்த முறையும் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் அருமையான கேட்ச் பிடித்து வார்னர் விக்கெட்டை வீழ்த்த காரணமாக இருந்தார். சிறப்பாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்த வார்னர் 60 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அவர் தனது இன்னிங்ஸில் 8 பவுண்டரிகளை அடித்தார்.
இவரைத்தொடர்ந்து பேட் செய்ய வந்த ஸ்மித் 2, ஏற்கனவே களத்தில் இருந்த லபுஸ்சேன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய பெளலர்களில் முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
இதுவரை 23 ஓவர்கள் வீசப்பட்டிருக்கும் நிலையில், இன்றைய நாளில் இன்னும் 63 ஓவர்கள் மீதமுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்