WTC Final 2023: Lunchக்கு பின் ரஹானே காலி - சீட்டுகட்டு போல் சரிந்த இந்தியா Tailenders! ஆஸி., வலுவான முன்னிலை
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Wtc Final 2023: Lunchக்கு பின் ரஹானே காலி - சீட்டுகட்டு போல் சரிந்த இந்தியா Tailenders! ஆஸி., வலுவான முன்னிலை

WTC Final 2023: Lunchக்கு பின் ரஹானே காலி - சீட்டுகட்டு போல் சரிந்த இந்தியா Tailenders! ஆஸி., வலுவான முன்னிலை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 09, 2023 07:32 PM IST

சிறப்பாக பேட் செய்து வந்த ரஹானே உணவு இடைவேளக்கு பின்னர் அவுட்டான நிலையில், அடுத்த வந்த டெயிலெண்டர்கள் சீட்டுக்கட்டு போல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இடையில் ஷர்துல் தாக்கூர் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

கிளீன் போல்டு ஆன உமேஷ் யாதவ் (இடது), ஆஸ்திரேலியா பவுலர் போலாந்தை பாராட்டும் சக வீரர்கள்
கிளீன் போல்டு ஆன உமேஷ் யாதவ் (இடது), ஆஸ்திரேலியா பவுலர் போலாந்தை பாராட்டும் சக வீரர்கள்

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய பவுலர்களில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன்குவிப்பில் ஈடுபடாமல் அவுட்டானார்கள். மிடில் ஆர்டரில் பேட் செய்த அஜிங்கியா ரஹானே - ரவிந்திர ஜடேஜா ஆகியோர் பொறுப்புடன் பேட் செய்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்ட ஜடேஜா 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். நிதானமாக பேட் செய்து வந்த ரஹானே இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 29 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பின்னர் மூன்றாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி இன்று தொடர்ந்தது. நிதனமாக பேட் செய்து வந்த ரஹானே, அதிரடி மோடுக்கு மாறி வேகமாக ரன்குவிப்பில் ஈடுபட்டார். அரைசதத்தை பூர்த்தி செய்த அவர் தொடர்ந்து ரன்வேட்டையில் ஈடுபட்டார்.

ரஹானேவுடன் இணைந்து ஷர்துல் தாக்கூரும் ரன்குவித்து நல்ல பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட்டார். மூன்றாவது நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 260 ரன்கள் எடுத்தது.

இதன்பின்னர் பேட் செய்ய வந்தபோது சிறப்பாக விளையாடி வந்த ரஹானே 89 ரன்னில் அவுட்டாக்கு திருப்புமுனை கொடுத்தார் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ். அவ்வளவுதான் அடுத்த வந்த டெயில்லெண்டர்கள் பெரிதாக ரன்குவிப்பில் ஈடுபடாவிட்டாலும், தங்களால் முடிந்த பங்களிப்பை வெளிப்படுத்தினர். உமேஷ் யாதவ் 5, முகமது ஷமி 13 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள்.

இதற்கிடையே இந்திய அணி பாலோ ஆன் தவிர்க்கும் விதமாக முக்கிய இன்னிங்ஸை வெளிப்படுத்திய ஷர்துல் தாக்கூர் அரைசதம் விளாசி 51 ரன்களில் அவுட்டானார். ஆஸ்திரேலியா பவுலர்களில் கம்மின்ஸ் 3, ஸ்டார், க்ரீன், போலாந்து ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். ஸ்பின்னரான நாதன் லயன் ஒரு விக்கெட்டை எடுத்தார். 

ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.