WTC 2023 Final: கேப்டன்களுக்கு இடையேயான போர்! வென்றார் பேட் கம்மின்ஸ் - ரோஹித் சொதப்பல்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா கேப்டன்களுக்கு இடையிலான போரில், ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் வெற்றி பெற்றுள்ளார். பேட்டிங்கில் ஜொலிக்காத போதிலும் பந்து வீச்சில் ஆஸ்திரிரேலியா அணியின் விக்கெட் அக்கவுண்டை தொடங்கியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா இடையே லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி ஆட்டத்தின் இரண்டாவது நாளான இன்று, 469 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் ஆல்அவுட்டானது.
இந்திய பவுலர்களில் முகமது சிராஜ் 4, முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தற்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இந்திய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக கேப்டன் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
ஆரம்பத்தில் நல்ல தொடக்கத்தை தந்து இருவரும் ரன்குவிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆட்டத்தின் 6வது ஓவரில் அணியின் ஸ்கோர் 30 என இருந்தபோது ரோஹித் ஷர்மா, ஆஸ்திரேலியா கேப்டன் பேச் கம்மின்ஸ் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானர்.
ரோஹித் அவுட்டானது மிடில், லெக் ஸ்டம்புக்கு இடையே சென்ற பந்தாகவும், கிளீன் விக்கெட் பந்தாக இருந்ததால் ரிவியூ கேட்காமல் நடையை கட்டினார்.
இவர் அவுட்டான அடுத்த ஓவரிலேயே போலாந்து வீசிய பந்தில் 13 ரன்கள் எடுத்த நிலையில் கிளீன் போல்டாகி வெளியேறினார். அவுட்சைடு செல்லும் என கணித்து கில் லீவ் செய்த பந்து உள்ளே ஸ்விங் ஆகி போல்ட் ஆனது ஏமாற்றத்துடன் சென்றார்.
இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோருக்கு இது சர்ப்ரைசிங்காக 50வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. அத்துடன் இரு அணிகளுடையே கேப்டன்களிலும் யார் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணியில் பேட் செய்த கம்மின்ஸ் பேட்டிங்கில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். ஆனால் பவுலிங்கில் தொடக்கத்திலேயே திருப்புமுனையை ஏற்படுத்தி தந்துள்ளது.
இந்திய அணியின் முதல் விக்கெட், அதுவும் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் கேப்டன்களுக்கு இடையிலான போரில் கம்மின்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்