Wrestlers Protest: மல்யுத்தவீரர்கள் நடத்தப்பட்ட விதம் வேதனை அளிக்கிறது! 1983 கிரிக்கெட் உலக்கோப்பை அணி கருத்து!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Wrestlers Protest: மல்யுத்தவீரர்கள் நடத்தப்பட்ட விதம் வேதனை அளிக்கிறது! 1983 கிரிக்கெட் உலக்கோப்பை அணி கருத்து!

Wrestlers Protest: மல்யுத்தவீரர்கள் நடத்தப்பட்ட விதம் வேதனை அளிக்கிறது! 1983 கிரிக்கெட் உலக்கோப்பை அணி கருத்து!

Kathiravan V HT Tamil
Jun 02, 2023 06:13 PM IST

”மல்யுத்த வீரர்களின் குறைகள் விரைவாகக் கேட்கப்பட்டு விரைவில் தீர்க்கப்படும் என்று ஆவலுடன் நம்புகிறோம். நாட்டின் சட்டம் வெல்லட்டும்”

முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ்
முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் (HT_PRINT)

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

மேலும் கடந்த மே 28ஆம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவின் போது நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை டெல்லி போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதில் பஞ்ரங் புனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் டெல்லி முழுவதும் 700 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 30ஆம் தேதி ஒலிம்பிக் மற்றும் மற்ற போட்டிகளில் தாங்கள் வாங்கிய பதக்கங்களை கங்கை நதியில் வீச உள்ளதாக கூறி ஹரித்துவாருக்கு சென்ற மல்யுத்த வீராங்கனைகளை விவசாய சங்கத்தினர் சந்தித்து சமாதானம் செய்ததுடன் அவர்களின் பதக்கங்களை வாங்கி வைத்துக்கொண்டனர்.

இந்த நிலையில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்பாக 1983ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் “"எங்கள் சாம்பியன் மல்யுத்த வீரர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்படுவதைக் கண்டு நாங்கள் மனவேதனையும், கவலையும் அடைகிறோம். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பதக்கங்களை கங்கை நதியில் விட நினைப்பதை கண்டு நாங்கள் மிகவும் கவலையுறுகிறோம்.

அந்த பதக்கங்களில் பல வருட முயற்சி, தியாகம், உறுதிப்பாடு மற்றும் மன உறுதி ஆகியவை அடங்கி உள்ளது. அது அவர்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல; தேசத்தின் பெருமையும் மகிழ்ச்சியும் அதில் உள்ளது. இந்த விஷயத்தில் அவசர முடிவு எடுக்க வேண்டாம் என்று அவர்களை கேட்டுக்கொள்கிறோம், மேலும் அவர்களின் குறைகள் விரைவாகக் கேட்கப்பட்டு விரைவில் தீர்க்கப்படும் என்று ஆவலுடன் நம்புகிறோம். நாட்டின் சட்டம் வெல்லட்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.