World Archery Championships 2023: மெக்சிகோவை வீழ்த்திய இந்தியா - முதல் முறையாக தங்கம் வென்று சாதனை
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் மெக்சிகோ அணியை வீழ்த்தி இந்தியாவுக்காக முதல் முறையாக தங்க பதக்கத்தை வென்று இந்திய அணி சேர்ந்த ஜோதி, அதீதி, பர்னீத் ஆகியோர் வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இதில் விளையாடிய இந்திய அணியில் இடம்பிடித்த ஜோதி சுரேகா, அதீதி ஸ்வாமி, பர்னீத் கெளர் ஆகியோர், மெக்சிகோவின் டாஃப்னே குயின்டெரோ, அனா சோபியா ஹெர்னாண்டஸ் ஜியோன் மற்றும் ஆண்ட்ரியா பெசெரா ஆகியோர் இறுதிப்போட்டியில் வீழ்த்தினர்.
235-229 என்ற புள்ளி கணக்கில் இந்திய வெற்றி பெற்ற நிலையில், முதல் முறையாக உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளது. இரண்டு முறை உலக வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற இத்தாலியை சேர்ந்த செர்ஜியோ பாக்னி இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இந்தியா முதல் தங்கத்தை வெல்வதற்கு காரணமாக அமைந்தார்.
இளம் மற்றும் அனுபவ வீரர், வீராங்கனைகள் கொண்ட அணியை உருவாக்கி பயிற்சி அளித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். இதன் மூலம் 59-57, 59-58, 59-57, 58-57 என்ற கணக்கில் நான்கு முனைகளிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
ஜோதி, அதீதி, பர்னீத் என மூவரும் இணைந்து 19, 10s புள்ளிகளை பெற்றுள்ளனர். மெக்சிகோ அணியினர் 14, 10s புள்ளிகளை மட்டுமே பெற்றனர்.
27 வயதாகும் அனுபவ வீராங்கனையான ஜோதி, உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் இதற்கு முன்னர் 2021இல் மகளிர் அணி, மகளிர் கலவை அணி, தனி போட்டி என மூன்றிலும் வெள்ளி வென்றுள்ள. இதற்கு முன்னர் 2019இல் மகளிர் அணி, தனி போட்டி என இரண்டில் வெண்கலமும், 2017இல் நடைபெற்ற தொடரில் மகளிர் அணி போட்டியில் வெள்ளியும் வென்றுள்ளார்.
இந்த தொடரில் முதல் சுற்றில் துருக்கியை வீழ்த்தி பின்னர் சீனா தைப்பே, கொலம்பியா அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. இதன்பின்னர் இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் ஆனது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்