Womens Junior Asia cup Hockey 2023: ஜப்பானை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்த இந்தியா! முதல் அணியாக மற்றொரு சாதனை
ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் சிலி நாட்டில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளது இந்திய மகளிர் அணி.
ஜப்பானில் உள்ள கமாமிகஹராவ் நகரில் எட்டாவது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதையடுத்து லீக் சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் சீனா, முன்னாள் சாம்பியன்களான தென்கொரியா, இந்தியா, ஜப்பான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
இதைத்தொடர்ந்து முதல் அரையிறுதி போட்டி இந்தியா - ஜப்பான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டாவது அரையிறுதி போட்டி சீனா - தென்கொரியா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும்.
முன்னதாக, இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் சீனா தைப்பே அணியை 11-0 என்ற கோல் கணக்கில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணியாக இருந்துள்ளது.
இந்த தொடரில் டாப் 3 இடங்களை பிடிக்கும் அணி வரும் நவம்பர் மாதத்தில் சிலி நாட்டில் நடைபெற இருக்கும் ஜூனியர் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும். அந்த வகையில் இறுதிபோட்டிக்கு நுழைந்திருக்கும் இந்திய அணி, முதல் ஆசிய அணியாக ஜூனியர் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
நவம்பர் 29 முதல் டிசம்பர் 10 வரை சிலி நாட்டில் உள்ள சாண்டியாகா நகரில் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஐப்பான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று இறுதிக்கு நுழைந்திருப்பது சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. அத்துடன் ப்ரீத்தி தலைமையிலான இந்திய அணி லீக் சுற்று போட்டிகளில் உஸ்பேகிஸ்தான் அணியை 22-0, மலேசியா அணியை 2-1, சீனா தைப்பே அணியை 11-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தென் கொரியாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்