Junior Women's Hockey: ஆசிய கோப்பை சாம்பியனான ஜூனியர் ஹாக்கி வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
Hockey Junior Asia Cup champions:
மகளிர் ஹாக்கி ஜூனியர் ஆசிய கோப்பை சாம்பியன்களுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பையை முதன்முறையாக வென்றது இந்திய ஜூனியர் ஹாக்கி அணி.
ஜப்பானில் நடந்த போட்டியில் ஜெயித்துவிட்டு இன்று இந்தியாவுக்கு மகளிர் அணியினர் வந்தனர்.
பெங்களூர் விமான நிலையம் வந்திறங்கிய வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பைனல் போட்டியில் வீராங்கனை நீலம் முக்கியமான நேரத்தில் கோல் அடித்து உதவினார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்களது அணிக்காக நான் பெருமை கொள்கிறேன். உலகக் கோப்பைக்கும் நாங்கள் தகுதி பெற்றுவிட்டோம். அதில் தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நிச்சயம் பதக்கம் வெல்ல உழைப்போம்" என்றார்.
இனி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய கேப்டன் ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.
"நாங்கள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளோம். நாங்கள் விரும்புவது ஆதரவு மட்டுமே, நாங்கள் நிச்சயமாக உலகக் கோப்பையை வெல்வோம். எங்கள் பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்கள் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர் மற்றும் எங்களுக்கு நிறைய உதவினார்கள்" என்றார் ப்ரீத்தி.
மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை அரையிறுதியில் இந்திய அணி, 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்திய இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இறுதி ஆட்டத்தில் தென் கொரியாவுடன் மோதியது. இன்றைய பரபரப்பான பைனல் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.
8வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஜப்பானின் கமாமிகஹராவில் நடந்தது. ஜூன் 12 அன்று பிற்பகல 2.30 மணிக்கு தொடங்கிய ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணியினர் சிறப்பாக விளையாடினர். அன்னு 22 வது நிமிடத்திலும், நீலம் 41வது நிமிடத்திலும் கோல் போட்டு இந்தியாவை வெற்றி பெறச் செய்தனர்.
தென்கொரியா ஒரே ஒரு கோல் மட்டுமே பதிவு செய்து தோல்வியைத் தழுவியது.
ஜூனியர் ஹாக்கி அணியின் வீராங்கனைகளுக்கு தலா ரூ.2 லட்சமும், துணைப் பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என ஹாக்கி இந்தியா நிர்வாகம் அறிவித்தது.
ஜூனியர் ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியனான இந்திய அணியினருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்து மழை குவிந்து வருகிறது.
ஆசிய கோப்பை போட்டியில் இந்திய ஜூனியர் அணி இறுதி ஆட்டத்தில் அடியெடுத்து வைத்தது இதுவே இரண்டாவது முறையாகும். ஏற்கனவே 2012ம் ஆண்டில் 2வது இடம் பிடித்திருந்தது.
இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததன் மூலம், இந்திய அணி வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் சிலியில் நடைபெறும் ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கும் நேரடியாக தகுதி பெற்றுவிட்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும், இந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றி ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்