Pakistan: ‘உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாட பாக்., அணி இந்தியா வருமா?’-பாக்., அமைச்சர் பதில்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pakistan: ‘உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாட பாக்., அணி இந்தியா வருமா?’-பாக்., அமைச்சர் பதில்

Pakistan: ‘உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாட பாக்., அணி இந்தியா வருமா?’-பாக்., அமைச்சர் பதில்

Manigandan K T HT Tamil
Jul 09, 2023 04:37 PM IST

Worldcup Cricket: இந்தப் போட்டித் தொடரில் விளையாட இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்ப முடியாது என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

முன்னதாக, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் நடைபெற இருக்கிறது.

இந்தப் போட்டித் தொடரில் விளையாட இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்ப முடியாது என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

அதேநேரம், பாகிஸ்தான் இல்லாமல் பொதுவான இடத்தில் நடத்தப்பட்டால் நாங்கள் விளையாடத் தயார் என பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் ஈஷான் மஸாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனது துறைக்கு கீழ்தான் வருகிறது. எனது தனிப்பட்ட கருத்தை தெரிவிக்கிறேன். ஆசிய கோப்பை விளையாட்டுப் போட்டியை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என இந்தியா விரும்புகிறது. அதேநேரம், நாங்களும் உலகக் கோப்பை போட்டியை பொதுவான இடத்தில் நடத்துமாறு கோருவோம்.

வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஸர்தாரி தலைமையிலான குழுவில் நான் உள்பட 11 அமைச்சர்கள் அங்கம் வகிக்கிறோம். இந்த விவகாரம் குறித்து விவாதித்துவிட்டு நாங்கள் எங்களது பரிந்துரைகளை தெரிவிப்போம்.

அதன் பிறகு பிரதமர் இறுதி முடிவை எடுப்பார். ஆசிய கோப்பை விளையாட்டைப் பொருத்தவரை பாகிஸ்தான் தான் போட்டியை நடத்தும் நாடு. எனவே அதற்கு எங்கெங்கு நடத்த வேண்டும் என்ற உரிமை இருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களும் இதையே விரும்புவார்கள். எனக்கு ஹைபிரிட் மாடல் தேவையில்லை.

விளையாட்டில் அரசியலை புகுத்துகிறது இந்தியா. ஏன் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுக்கிறார்கள் என தெரியவில்லை. இந்திய பேஸ்பால் அணி கூட இங்கு வந்து விளையாடியிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் கால்பந்து, ஹாக்கி, செஸ் அணிகள் இந்தியா சென்று விளையாடி திரும்புகிறது. கிரிக்கெட் அணி மட்டும் ஏன் வர மறுக்கிறது?

நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளும் இங்கு வந்தன. அவர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கையும் நடத்தினோம். அதிக வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடினர் என்று ஈஷான் மஸாரி தெரிவித்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.