Rinku Singh: ரிங்கு சிங், ருதுராஜ், ஜிதேஷ் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்?
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Rinku Singh: ரிங்கு சிங், ருதுராஜ், ஜிதேஷ் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்?

Rinku Singh: ரிங்கு சிங், ருதுராஜ், ஜிதேஷ் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்?

Manigandan K T HT Tamil
Jul 06, 2023 02:34 PM IST

West Indies Tour: வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிவடைந்ததும் அடுத்த ஒரு வாரத்தில் அயர்லாந்துக்கு எதிராக இந்தியா விளையாடவுள்ளது.

ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா
ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா

இந்த டீமை ஹார்திக் பாண்டியா வழிநடத்தவுள்ளார். சூர்ய குமார் யாதவ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல்-இல் கலக்கிய திலக் வர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. விராட் கோலி, அஸ்வின், முகமது ஷமி ஆகிய சீனியர் வீரர்களும் அணியில் இடம்பெறவில்லை.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்காக டி20-இல் கலக்கிவரும் வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனக் கூறலாம்.

இந்த அணி வலிமையானது என கருதப்பட்டாலும், விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருவது கண்கூடாகிறது.

ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சீசனில் கலக்கிய ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

சஞ்சு சாம்சன் 3வது வரிசையில் களமிறங்கினால், அடுத்து சூர்யகுமார் யாதவ், அதற்கு அடுத்து ஹார்திக் பாண்டியா ஆகியோர் களமிறங்கினால் 6வது வரிசையில் களமிறங்கி ரிங்கு சிங் மேஜிக் நிகழ்த்துவார் என்பதே ரசிகர்களின் வாதமாக உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிவடைந்ததும் அடுத்த ஒரு வாரத்தில் அயர்லாந்துக்கு எதிராக இந்தியா விளையாடவுள்ளது.

அந்தத் தொடரில் ரிங்கு சிங் நிச்சயம் இடம்பெறுவார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023 சீசனில் அதிக ஸ்கோர் பதிவு செய்த ருதுராஜ் கெய்க்வாடும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெறாமல் போனது ஆச்சரியமே. இதற்கு காரணமாக ஓபனிங் பேட்ஸ்மேன்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் அல்லது இஷான் கிஷன் ஆகியோரை களமிறக்கலாம் என்பதால் ருதுராஜ் கெய்க்வாடுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதாக கூறப்படுகிறது.

மற்றொரு காரணம், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றுள்ளார்.

எனவே, அவரும் ரிங்கு சிங்கைப் போலவே அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியிலும் வாய்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது.

வாய்ப்பு கிடைக்காமல் போன மற்றொரு வீரர் ஜிதேஷ் சர்மா. இவர், இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார்.

எனினும், அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 2 ஐபிஎல் சீசன்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடிய வீரர் ஜிதேஷ் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக செயல்படக் கூடியவர் என்பதால் இவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைத்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்.

சஞ்சு சாம்சன் காயம் அடைந்ததன் காரணமாகவே ஜிதேஷ் சர்மாவுக்கு இலங்கை, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது சஞ்சு சாம்சன் உடல் தகுதியுடன் இருப்பதால் அவர் அழைக்கப்படவில்லை என்றே கருத்தில் கொள்ள வேண்டும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.