Duleep Trophy Final: துலீப் டிராபி ஃபைனல் இன்று-மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம் மோதல்
தெற்கு மண்டலம் அணி வடக்கு மண்டலம் அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.
முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் கிரிக்கெட்டான துலீப் டிராபி 2023 தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கு மண்டலமும், தென் மண்டலமும் ஜூலை 12 புதன்கிழமை மோதுகின்றன.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது. காலை 9.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.
பிரியங்க் பஞ்சல் தலைமையிலான மேற்கு மண்டலம் தனது அரையிறுதியை மத்திய மண்டலத்திற்கு எதிராக டிரா செய்தது.
தெற்கு மண்டலம் அணி வடக்கு மண்டலம் அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.
மேற்கு மண்டலம் சார்பில் முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் எடுத்த சேத், அதைத் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் 278 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் 133 ரன்கள் குவித்த புஜாரா அதிக நம்பிக்கையுடன் இருப்பார்.
ஹனுமா விஹாரி தலைமையிலான தெற்கு மண்டல அணி அரையிறுதியில் வடக்கு மண்டலத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த போட்டியில் 76 மற்றும் 54 ரன்கள் எடுத்த மயங்க் அகர்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ரன் சேஸிங்கில் சாய் கிஷோர் சரியான நேரத்தில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து தென் மண்டலத்தை பைனலுக்கு கொண்டு வர உதவினார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் கோவை கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடினார் என்பதால் சாய் சுதர்ஷன் தெற்கு மண்டலத்திற்கு பெரும் உதவியாக இருப்பார்.
இறுதிப் போட்டியை bcci.tv தங்கள் வலைத்தளத்தில் ஒளிபரப்புவதாக பி.சி.சி.ஐ சமீபத்தில் அறிவித்தது.
மைதானம் எப்படி?
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் உள்ள ஆடுகளம் பேட்டிங்கிற்கு சிறந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சாளர்கள் ரன் குவிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது கடினம்.
மேற்கு மண்டலம் (பிளேயிங் லெவன்)
பிருத்வி ஷா, பிரியங்க் பஞ்சல் (கேப்டன்), அர்சான் நாக்வாஸ்வாலா, சிந்தன் கஜா, ஹெட் படேல் (விக்கெட் கீப்பர்), அதித் சேத், சர்பராஸ் கான், யுவராஜ்சிங் தோடியா, சூர்யகுமார் யாதவ், புஜாரா, தர்மேந்திரசிங் ஜடேஜா.
தெற்கு மண்டலம் (பிளேயிங் லெவன்)
ஹனுமா விஹாரி (கேப்டன்), மயங்க் அகர்வால், சாய் சுதர்சன், ரிக்கி புய் (விக்கெட் கீப்பர்), ரவிக்குமார் சமர்த், வாஷிங்டன் சுந்தர், திலக் வர்மா, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், வித்வத் காவேரப்பா, விஜயகுமார் வைஷாக்
டாபிக்ஸ்