IND vs WI 2nd Odi: இந்திய அணி சொதப்பல்.. அபார வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் இரண்டாவது போட்டி நேற்று பிரிட்ஜ் டவுன் நகரில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் இந்திய அணி சார்பில் பேட்டிங் செய்த இஷான் கிஷன், ஷுப்மன் கில் இருவரும் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் அடித்தனர்.
முதலில் ஷுப்மன் கில் 34 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிய தொடங்கியது. தொடக்கத்தில் இருந்து சரியாக விளையாடி வந்த இஷாந்த் கிஷன் 55 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
அதற்குப் பிறகு வந்த மற்றும் 3 பேரும் இரட்டை இலக்கை ரன்களோடு ஆட்டத்தை இழந்தனர். மற்றவர்களும் சொற்பரங்கள் எடுத்த காரணத்தினால் 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 181 ரன்கள் எடுத்தது.
இது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகவும் எளிய இலக்காக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த மோட்டி மற்றும் ரொமாரியோ இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் எடுத்தனர்.
முன்னதாக இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது. அதற்கு பதிலாக அக்சர் பட்டேல், சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றனர். இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்திச் சென்றார்.
குறிப்பாக 90 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை இழந்த இந்திய அணி அடுத்த 90 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டம் இழந்தது. 182 என் ரன்களை இலக்காக கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி களத்தில் இறங்கியது.
முதலில் களமிறங்கிய பிரிட்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் அதிரடியாக விளையாடினர். இருவரும் சேர்ந்து 54 ரன்கள் எடுத்தனர். 36 ரன்கள் எடுத்த கைல் மேயர்ஸ் ஆட்டம் இழந்தார். அதே ஓவரில் 15 ரன்கள் எடுத்த பிரிட்டன் கிங் ஆட்டம் இழந்தார்.
அதன் பின்பு களமிறங்கிய ஷாய் ஷோப் அரை சதம் அடித்து 63 ரன்கள் எடுத்தார். அவரோடு இணைந்து கியாஷி கார்டி 48 ரன்கள் எடுத்தார். பின்னர் 36.4 ஓவரில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரில் பதிவு செய்துள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்