Nicolas Pooran: உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் 2வது சதம் பதிவு செய்த நிகோலஸ் பூரன்
West Indies: முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்களை குவித்தது.
உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் குரூப் ஏ பிரிவில் கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொண்டு விளையாடி வருகிறது வெஸ்ட் இண்டீஸ்.
ஹராரே தக்ஷின்கா ஸ்போர்ட் கிளப் மைதாநத்தில் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக நிகலோஸ் பூரன் 104 ரன்களை விளாசினார். கடைசி வரை ஆட்டமிழக்காமலும் நின்றார் பூரன். இது அவருக்கு ஒட்டுமொத்தமாக 3வது ஒரு நாள் கிரிக்கெட் சதம் ஆகும். இந்த உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் 2வது சதம் ஆகும்.
முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் ஓபனிங் பேட்ஸ்மேன் பிராண்டன் கிங், சார்லஸ் ஆகியோர் அரை சதம் விளாசி சரியான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
கேப்டனும் விக்கெட் கீப்பருமான ஷாய் ஹோப் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இன்னும் 3 ரன்கள் எடுத்திருந்தால் அவரும் அரை சதம் பதிவு செய்திருப்பார்.
கீமோ பால் 46 ரன்களுடன் பூரனுடன் களத்தில் இருந்தார்.
இவ்வாறாக வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 374 ரன்களை குவித்தது. 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது.
உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் குரூப் ஏ பிரிவில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம், யுஎஸ்ஏ ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன், அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
குரூப் ஏ பிரிவில் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் 3 ஆட்டங்களிலும் ஜெயித்து 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது ஜிம்பாப்வே.
நெதர்லாந்து அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2இல் ஜெயித்து ஒன்றில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் 3 ஆட்டங்களில் ஆடி 2 இல் ஜெயித்திருக்கிறது.
இந்த மூன்று அணிகளும் சூப்பர் சிக்ஸ் சுற்று முன்னேறிவிட்டன.
நேபாளம், யுஎஸ்ஏ ஆகிய அணிகள் வெளியேறிவிட்டன.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்