World Cup Qualifiers 2023: சதம் விளாசிய 2 வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  World Cup Qualifiers 2023: சதம் விளாசிய 2 வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்!

World Cup Qualifiers 2023: சதம் விளாசிய 2 வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்!

Manigandan K T HT Tamil
Jun 22, 2023 08:36 PM IST

West Indies vs Nepal: வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் 129 பந்துகளில் 132 ரன்கள் அடித்து அசத்தினார்.

சதம் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஷாய் ஹோப், நிகோலஸ் பூரண்
சதம் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஷாய் ஹோப், நிகோலஸ் பூரண் (AP)

இன்று குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற ஓர் ஆட்டத்தில் நேபாளம், பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் மோதின.

ஹராரேவில் நடந்த இந்த ஆட்டத்தில் நேபாள் அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடியது வெஸ்ட் இண்டீஸ்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் 129 பந்துகளில் 132 ரன்கள் அடித்து அசத்தினார்.

இவர் மொத்தம் 3 சிக்ஸையும், 10 ஃபோர்ஸையும் பறக்க விட்டார். ஸ்டிரைக் ரேட் 102.33 ஆக இருந்தது.

நிகோலஸ் பூரணும் சிறப்பாக ஆடி சதம் விளாசினார். நேபாள அணி சார்பில் ராஜ்பன்ஷி 10 ஓவர்கள் வீசி 52 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சுருட்டினார்.

இதையடுத்து 340 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி கத்துக்குட்டி அணியான நேபாளம் விளையாடியது.

எனினும், அந்த அணியால் 49.4 ஓவர்களில் 238 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.

நிகோலஸ் பூரணும் இது ODI-இல் இரண்டாவது சதம் ஆகும். ஷாய் ஹோப்புக்கு இது 15வது ODI சதமாகும்.

நெதர்லாந்து வெற்றி

முன்னதாக, நெதர்லாந்து, யு.எஸ்.ஏ அணிகளுக்கு இடையே நடந்த மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

நெதர்லாந்து அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய யு.எஸ்.ஏ 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை எடுத்தது.

212 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 43.2 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.