WI vs IND Day 5: மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம்-வெஸ்ட் இண்டீஸுக்கு சவால்
மழை காரணமாக இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம் இரவு 10 மணி வரை தொடங்கப்படவில்லை.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற இன்னும் 289 ரன்கள் தேவை. சந்திரபால், பிளாக்வுட் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
மழை காரணமாக இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம் இரவு 10 மணி வரை தொடங்கப்படவில்லை.
கொஞ்சம் மேக மூட்டம் விலகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், போட்டி சீக்கிரம் தொடங்கிவிடும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மிகப் பெரிய இலக்கை வெஸ்ட் இண்டீஸ் விரட்டிப் பிடிக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்கள் எடுத்தது.
இதில் விராட் கோலி 121 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். ரோகித் சர்மா 80 ரன்களும், ஜடேஜா 61 ரன்கள், ஜெய்ஸ்வால் 57 ரன்கள், அஸ்வின் 56 ரன்கள் எடுத்தனர். இதனை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கியது.
அப்போது பிராத் வெயிட் 75 ரன்கள் எடுத்தார். அலிக் 37 ரன்கள், சந்திர பால் 33, மெக்கன்சி 32 ரன்கள் எடுத்தனர். மழையின் காரணமாக ஆட்டம் சிறிது தடைபட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
அதன் பின்னர் நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் சிராஜ் பந்து வீச்சு வெஸ்ட் இண்டீஸ் அணியை கதிகலங்க வைத்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் இந்திய அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆட்டத்தை தொடங்கினர். ரோகித் சர்மா 57 ரன்கள், ஜெய்ஸ்வால் 38 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 15 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து மொத்தம் 31 ரன்கள் முன்னிலை வகித்தது. அப்போது மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மீண்டும் தொடங்கப்பட்ட ஆட்டத்தில் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கி ஆட்டத்தை தொடர்ந்தனர். அப்போது இந்திய அணி 24 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி 365 ரன்கள் இலக்காக கொண்டு களமிறங்கியது. அப்போது களமிறங்கிய பிராத்வொயிட் மற்றும் சந்தர்பால் ஆகியோர் விளையாடினர். இதில் வோயிட் 28 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற இன்னும் 289 ரன்கள் தேவை.
டாபிக்ஸ்