Ind vs WI: டெஸ்டில் இதுவரை எத்தனை முறை வெஸ்ட் இண்டீஸை இந்தியா வீழ்த்தியிருக்கிறது?
Test Cricket: தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ள இந்திய அணி, இந்த தொடரில் கலக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
இன்றிரவு 7.30 மணிக்கு டொமினிக்காவில் இப்போட்டி தொடங்குகிறது. ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023-இல் இடம் பெறத் தவறிய வெஸ்ட் இண்டீஸ், 2023-2025 உலகக் கோப்பையின் முதல் டெஸ்ட் தொடரில் விளையாடத் தயாராகி இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 34.62 சதவீத புள்ளிகளுடன் எட்டாவது இடத்தைப் பிடித்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அந்த அணியால் தகுதி பெற முடியவில்லை.
குடகேஷ் மோதி, கைல் மேயர்ஸ் மற்றும் ஜெய்டன் சீல்ஸ் போன்றவர்கள் காயம் காரணமாக அணியில் இடம் பெறாததால், அனுபவம் வாய்ந்த சில வீரர்களை அந்த அணி இழந்திருக்கிறது.
கிர்க் மெக்கன்சி மற்றும் ரகீம் கார்ன்வால் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மறுபுறம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்ததால், இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லத் தவறியது.
தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ள இந்திய அணி, இந்த தொடரில் கலக்கும் என எதிர்பார்க்கலாம்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முழு பலம் வாய்ந்த அணியை அறிவித்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் மற்றும் முகேஷ் குமார் போன்ற சில புதிய முகங்கள் இந்த தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த 4 வீரர்களில் குறைந்தது 2 வீரர்களாவது முதல் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு அதிகம்.
மைதானம் எப்படி?
டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பூங்காவில் உள்ள ஆடுகளம் பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் மைதானம் போல செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாளில் பவுலிங்கிற்கு சாதகமாகவும், அதே நேரத்தில் போட்டியின் 2 மற்றும் 3 வது நாளில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டம் தொடர்ந்து முன்னேறும்போது ஆடுகளத்தின் மேற்பரப்பு மெதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆட்டத்தின் கடைசி இரண்டு நாட்களில் ஆட்டத்தின் முடிவை தீர்மானிப்பதில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என கருதப்படுகிறது.
மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 250-270 ஆகும்.
போட்டியின் முதல் மற்றும் கடைசி நாளில் டொமினிகாவில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பிளேயிங் லெவன்
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ், முகேஷ் குமார்.
வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன்
கிரெய்க் பிராத்வெயிட் (கேப்டன்), சந்தர்பால், ரேமன் ரீஃபர், ரகீம் கார்ன்வால், ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானாஸ், ஜோஷுவா டா சில்வா (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கெமர் ரோச், ஷானன் கேப்ரியல்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, வலிமையான அணியாக உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை கூட அந்த அணி வென்றதில்லை.
எனவே, முதல் போட்டியில் ஃபார்மில் உள்ள இந்திய அணிக்கு சவால் விட வேண்டும் என்றால் அவர்கள் கடினமான உழைப்பை தர வேண்டியது இருக்கும்.
இப்போட்டியை டிடி, ஃபேன்கோடு, ஜியோ சினிமா ஆகியவற்றில் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
நேருக்கு நேர்
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு எதிராக 30-22 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசியாக 2002-ம் ஆண்டு மே மாதம் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இதுவரை மொத்தம் 98 ஆட்டங்கள் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றுள்ளது. இதில், 30 ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸும், 22 ஆட்டங்களில் இந்தியாவும் ஜெயித்துள்ளன.
46 ஆட்டங்கள் டிரா ஆகியிருக்கின்றது. சொந்த மண்ணில் மொத்தம் 51 டெஸ்ட் ஆட்டங்களில் இந்தியாவை வெஸ்ட் இண்டீஸ் எதிர்கொண்டிருக்கிறது.
அதில் 16 ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் தான் ஜெயித்திருக்கிறது. 9 இல் இந்தியா ஜெயித்துள்ளது. 26 ஆட்டங்கள் டிரா ஆகியிருக்கிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்