IND vs WI: அர்ஷ்தீப், சஹல் அசத்தல் பவுலிங்.. வெஸ்ட் இண்டீஸ் 149 ரன்கள் சேர்ப்பு
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Wi: அர்ஷ்தீப், சஹல் அசத்தல் பவுலிங்.. வெஸ்ட் இண்டீஸ் 149 ரன்கள் சேர்ப்பு

IND vs WI: அர்ஷ்தீப், சஹல் அசத்தல் பவுலிங்.. வெஸ்ட் இண்டீஸ் 149 ரன்கள் சேர்ப்பு

Manigandan K T HT Tamil
Aug 03, 2023 09:56 PM IST

West Indies Innings: முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை குவித்தது. 150 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடவுள்ளது.

டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங், அபாரமாக ஃபீல்டிங் செய்த இந்திய வீரர்
டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங், அபாரமாக ஃபீல்டிங் செய்த இந்திய வீரர்

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கிறது. முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என இந்தியா வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து தற்போது இரு அ்ணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.

அதன்படி முதல் டி20 இன்று தொடங்கியது. டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருக்கிறார். திலக் வர்மா, முகேஷ் குமார் ஆகியோர் சர்வதேச டி20இல் அறிமுகமாகினர்.

அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் போவெல் 48 ரன்களும், நிகோலஸ் பூரன் 41 ரன்களும் விளாசினர். அர்ஷ்தீப், சஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். பாண்டியா, குல்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.

முதலில் கைல் மேயர்ஸ் 1 ரன்னில் நடையைக் கட்டினார். பிராண்டன் கிங் 28 ரன்களிலும், ஜான்சன் சார்லஸ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மயர் 10 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இவ்வாறாக, வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. 20 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடவுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.