IND vs WI: 'இது டி20 இல்லை ODI கிரிக்கெட்'-ஜடேஜா, குல்தீப் சுழலில் 114 ரன்களில் சுருண்ட WI
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Wi: 'இது டி20 இல்லை Odi கிரிக்கெட்'-ஜடேஜா, குல்தீப் சுழலில் 114 ரன்களில் சுருண்ட Wi

IND vs WI: 'இது டி20 இல்லை ODI கிரிக்கெட்'-ஜடேஜா, குல்தீப் சுழலில் 114 ரன்களில் சுருண்ட WI

Manigandan K T HT Tamil
Jul 27, 2023 09:42 PM IST

முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களில் ஆட்டமிழந்தது.

ஹெட்மயர் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜடேஜாவை பாராட்டிய கேப்டன் ரோகித்
ஹெட்மயர் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜடேஜாவை பாராட்டிய கேப்டன் ரோகித் (AFP)

இதையடுத்து, முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோரின் சுழல்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது.

ஹர்திக் பாண்டியா, முகேஷ் குமார், ஷர்துல் ஆகியோரும் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் மட்டும் 43 ரன்கள் பதிவு செய்தார்.

மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களில் ஆட்டமிழந்தது.

இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடவுள்ளது.

அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

முன்னதாக, தொடக்க வீரர்களாக பிராண்டன் கிங் களமிறங்கினார். மற்றொரு பக்கம் கைல் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினார். 2 ரன்கள் எடுத்திருந்த கைல் மேயர்ஸ் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்து வந்த அலிக் 22 ரன்கள் எடுத்திருந்தபோது முகேஷ் குமார் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். ஜடேஜா, ஹெட்மயர், போவெல், ஷெப்ஹெர்டு ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

கேப்டன் ஷாய் ஹோப், டொமினிக் டிரேக்ஸ், யான்னிக் கரியா, ஜேடன் சீல்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் சுருட்டினார்.

ஷெப்ஹெர்டின் கேட்ச்சை அபாரமாக பிடித்து அசத்தினார் கோலி. ஸ்லிப்பில் நின்றிருந்த அவர், தொட்டு விட்ட பந்தை லாவகமாக பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். அவரை சக வீரர்கள் பாராட்டினர்.

 ‘இது டி20 கிரிக்கெட் இல்லை, ஒரு நாள் தொடர் என்பதை வெஸ்ட் இண்டீஸ் ஞாபகம் வைத்துக் கொண்டால் சரி’ என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.