IND vs WI 2nd Test: அனல் பறக்கும் ஆட்டம் - வெற்றிக்காக போராடும் வெஸ்ட் இண்டீஸ்!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Wi 2nd Test: அனல் பறக்கும் ஆட்டம் - வெற்றிக்காக போராடும் வெஸ்ட் இண்டீஸ்!

IND vs WI 2nd Test: அனல் பறக்கும் ஆட்டம் - வெற்றிக்காக போராடும் வெஸ்ட் இண்டீஸ்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 24, 2023 07:00 AM IST

வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற இன்னும் 289 ரன்கள் எடுக்க வேண்டும்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்

இதில் விராட் கோலி 121 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். ரோகித் சர்மா 80 ரன்களும், ஜடேஜா 61 ரன்கள், ஜெய்ஸ்வால் 57 ரன்கள், அஸ்வின் 56 ரன்கள் எடுத்தனர். இதனை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கியது.

அப்போது பிராத் வெயிட் 75 ரன்கள் எடுத்தார். அலிக் 37 ரன்கள், சந்திர பால் 33, மெக்கன்சி 32 ரன்கள் எடுத்தனர். மழையின் காரணமாக ஆட்டம் சிறிது தடைபட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.

அதன் பின்னர் நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் சிராஜ் வந்து வீச்சு வெஸ்ட் இண்டீஸ் அணியை கதிகலங்க வைத்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் இந்திய அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆட்டத்தை தொடங்கினர். ரோகித் சர்மா 57 ரன்கள், ஜெய்ஸ்வால் 38 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 15 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து மொத்தம் 31 ரன்கள் முன்னிலை வகித்தது. அப்போது மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மீண்டும் தொடங்கப்பட்ட ஆட்டத்தில் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கி ஆட்டத்தை தொடர்ந்தனர். அப்போது இந்திய அணி 24 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிக்லர் செய்வதாக அறிவித்தது.

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி 365 ரன்கள் இலக்காக கொண்டு களமிறங்கியது. அப்போது களமிறங்கிய பிரீத் வெயிட் மற்றும் சந்தர்பால் ஆகியோர் விளையாடினர். இதில் பிரீத் வோயிட் 28 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் நான்காவது நாள் ஆட்ட முடிவில், சந்தர்பால் 24 ரன்களும், பிளாக் அவுட் 20 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பாக அஸ்வின் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற இன்னும் 289 ரன்கள் தேவை என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.