Watch Video: நெருங்கி வரும் WTC Final; மகுடம் யாருக்கு? - ப்ரோமோ வெளியிட்ட ஐசிசி!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Watch Video: நெருங்கி வரும் Wtc Final; மகுடம் யாருக்கு? - ப்ரோமோ வெளியிட்ட ஐசிசி!

Watch Video: நெருங்கி வரும் WTC Final; மகுடம் யாருக்கு? - ப்ரோமோ வெளியிட்ட ஐசிசி!

Karthikeyan S HT Tamil
Jun 02, 2023 03:07 PM IST

WTC Final 2023: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்க உள்ளதையொட்டி, இந்த போட்டி தொடர்பான ப்ரோமோ ஒன்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

ரோஹித் சர்மா, பாட் கம்மின்ஸ்
ரோஹித் சர்மா, பாட் கம்மின்ஸ்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் 7ஆம் தேதி லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

இரு அணி வீரர்களும் இந்தப் போட்டிக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை ஓவல் மைதானத்தில் எதிர்கொள்வது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதுவும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஓரளவுக்காவது தாக்குப் பிடிக்க முடியும்.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தப் போட்டி தொடர்பாக ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சுமார் ஒரு நிமிடம் ரன் டைம் கொண்ட ப்ரோமோ ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், மைதானத்தில் இரு அணிகளின் சிறப்பான தருணங்களை டை இந்த வீடியோ விளக்குகிறது. ‘தி க்வெஸ்ட் டு தி பெஸ்ட்’ என இந்த வீடியோ நிறைவு பெறுகிறது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தண்டாயுதம் (Mace) வடிவிலான பரிசு வழங்கப்படும். இந்திய அணி கடந்த 2021 ஆம் ஆண்டில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது. தற்போது இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. 

முன்னதாக, இந்திய அணிக்காக அடிட்டாஸ் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்த புதிய ஜெர்சியை அந்நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது. டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என இந்திய அணியின் 3 புதிய ஜெர்சி வெளியிடப்பட்டிருந்தது. இதற்காக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள ஜெர்சிகள் மும்பை வான்கடே மைதானத்தின் ஆகாயத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. இதை சாலையில் இருந்து பார்த்தவாறு கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.