HBD Gareth Bale: களத்தில் எப்போதும் துறுதுறு, விறுவிறு! கால்பந்து விளையாட்டின் சிறந்த விங்கர்
வேல்ஸ் கால்பந்து அணியின் சிறந்த வீரராகவும், கால்பந்து ஆட்டத்தில் விங்க் பொஷிசனில் தனது எனர்ஜி மிகுந்து துறுதுறுப்பான ஆட்டத்தால் எதிரணியை மிரட்டியவருமாக இருந்தவர் வேல்ஸ் அணியின் முன்னாள் வீரர் கரேல் பேல். இவரது விறுவிறு ஆட்டத்துக்கென தனியொரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
கால்பந்து விளையாட்டில் ஸ்டிரைக்கர், பார்வார்ட் வீரர்களுக்கு அடுத்தபடியாக விங்கர் பொஷிசனில் நிற்கும் வீரர்கள் முக்கியமானவர்கள். இவர்களின் பணி இரு குழல் துப்பாக்கி போல் எதிரணியை தனது பகுதிக்குள் நுழைய விடாமல் அட்டாக் செய்வதும், எதிரணி எல்லைக்குள் பந்தை முன்னோக்கி செல்வதற்கான பொறுப்பும் இவர்கள் வசமே உள்ளது.
அந்த வகையில் பந்தை அதிகம் டாமினேட் செய்யும் வீரர்களாக இவர்கள் இருப்பார்கள். விங்கர்கள் இடது அல்லது வலது ஓரங்களில் பந்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து முன்நோக்கி செல்லவோ, பின்நோக்கி சென்று விடாமல் தடுக்கவோ செய்ய வேண்டும். அப்படி பார்க்கையில் எந்த நேரமும் அலார்ட்டாக இருக்கும் இவர்கள் ஆட்டம் முழுவதும் முழு எனர்ஜியுடன் விளையாட வேண்டும்.
விங்கர் பொஷிசனில் மிகவும் சிறந்த வீரர் என்ற பெயரெடுத்த கரேத் பேல், மேற்கூறிய அத்துனை அம்சங்களையும் தான் விளையாடி அணிக்காக எந்த சிக்கலும் இல்லாமல் செய்யக்கூடிய வீரராக திகழ்ந்தார்.
வேல்ஸ் நாட்டை சேர்ந்தவரான பேல், புகழ்பெற்ற உள்ளூர் கிளப் அணிகளான டெட்டேனம் ஹார்ஸ்பூர், ரியல் மாட்ரிட் அணிகளுக்காக விளையாடியுள்ளார். கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு தேவையான தெறிக்கவிடும் வேகம், பவுர்புல்லான ஸ்டிரைக்குகள், ஸ்கில் செட் வெளிப்பாடு என அத்தனை ஒருங்கிணைந்த வீரராக இருந்துள்ளார். இவரது விறுவிறு ஆட்டத்துக்கென தனியொரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது
சவுதாம்டன் அணிக்காக 2007இல் இருந்து கால்பந்து வாழ்க்கையை தொடங்கிய இவர், ஆரம்பத்தில் இடது பின் பகுதி டிபெண்டராக விளையாடினார். பின்னர் தனது ஆட்டத்தை மெருகேற்றி விங்கராக உருவெடுத்தார்.
2007 முதல் 2013 வரை டெட்டேனம் ஹார்ஸ்பூர் அணிக்காக விளையாடினார். இதன் பின்னர் உலகமே வியக்கும் விதமாக 85.1 மில்லியன் யுரோ தொகை கொடுக்கப்பட்டு இவர் ரியல் மாட்ரிட் அணிக்கு மாற்றம் செய்யப்பட்டார். 2013 முதல் 2022 வரை ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய இவர், 176 போட்டிகளில் பங்கேற்று 81 கோல்களை அடித்துள்ளார். தற்போது லாஸ் ஏஞ்சலிஸ் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
சர்வதேச போட்டியை பொறுத்தவரை தேசிய அணியான வேல்ஸ் அணிக்காக 111 போட்டிகளில் பங்கேற்றி 41 கோல்களை அடித்துள்ளார். தேசிய அணிக்காக களமிறங்கிய இளவயது வீரர் என்ற பெருமையை பெற்ற வேல், தனது அணிக்காக அதிக போட்டியில் விளையாடி வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அத்துடன் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையும் இவர் வசமே உள்ளது.
64 ஆண்டுகள் கழித்து வேல்ஸ் அணி 2022 உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக வேல் வெளிப்படுத்தி விறுவிறு, துறுதுறு ஆட்டம் என்ற சொன்னால் மிகையாகாது. வேல்ஸ் அணிக்காக, ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதை 6 முறை வென்றுள்ளார்.
லா லிகா, ப்ரீமியர் லீக் கால்பந்து தொடர்களின் மன்னனாக இருந்து வந்த கரேத் பேல், 2015-16 சீசனில் UEFA ஆண்டின் சிறந்த வீரர், 2018இல் பிபா கிளப் உலகக் கோப்பை தங்க பந்து விருதுகளை வென்றுள்ளார். தனது கால்பந்து வாழ்க்கையில் லா லிகா, சாம்பியன்ஸ் லீக் என 15 கிளப் டைட்டில்கள் வென்றுள்ள கரேத் பேல், இந்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வை பெற்றார்.
தொடர்ந்து தனது அசத்தலான ஆட்டத்தை உள்ளூர் கிளப் அணிகளுக்காக வெளிப்படுத்தி வரும் கரேத் பேல், இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
டாபிக்ஸ்