தமிழ் செய்திகள்  /  Sports  /  Virat Kohli Touched By Hong Kong Team Gesture By Gifting Him Teams Jersey

Virat Kohli: உணர்வுபூர்வமான வாசகத்துடன் அணி ஜெர்சியை கோலிக்கு பரிசளித்த ஹாங்காங்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 01, 2022 02:59 PM IST

இதுவரை தனது தொப்பி, ஜெர்சி, பேட் என சக வீரர்களுக்கு பரிசாக வழங்கி வந்த விராட் கோலிக்கு ஹாங்காங் அணிவீரர்கள் தங்களது அணியின் ஜெர்சியில் உணர்ச்சிபூர்வமாக வாசகம் எழுதி பரிசாக அவருக்கு வழங்கி நெகிழ்ச்சி அடைய செய்துள்ளனர்.

விராட் கோலிக்கு தங்களது அணி ஜெர்சியை பரிசளித்தா ஹாங்காங்
விராட் கோலிக்கு தங்களது அணி ஜெர்சியை பரிசளித்தா ஹாங்காங் (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப் போட்டியின் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. இதையடுத்து போட்டி முடிந்த பின்பு நெகிழ்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

ஹாங்காங் வீரர்கள் தங்களது அணியின் ஜெர்சி ஒன்றை விராட் கோலிக்கு பரிசாக அளித்துள்ளார்கள். அதில், "ஒரு தலைமுறைக்கே ஊக்கம் அளிப்பவராக இருந்தமைக்கு நன்றி. உங்களோடு நாங்கள் நிற்கிறோம்" என்று எழுதியுள்ளார்.

<p>விராட் கோலிக்கு ஹாங்காங் வீரர்கள் பரிசலித்த ஜெர்சி</p>
விராட் கோலிக்கு ஹாங்காங் வீரர்கள் பரிசலித்த ஜெர்சி

இந்த ஜெர்சியை பெற்றுக்கொண்ட கோலி நன்றி தெரிவித்ததோடு, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து, "ஹாங்காங் அணியினருக்கு நன்றி. இது மிகவும் இனிமையான தருணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 44 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியை விளாசினார்.

 

WhatsApp channel